Published : 07 Sep 2014 01:13 PM
Last Updated : 07 Sep 2014 01:13 PM

டைமன்ட் லீக் கவுடாவுக்கு 4-வது இடம்

சர்வதேச தடகள சம்மேளனத்தின் டைமன்ட் லீக் தொடர் தடகள போட்டியின் ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கவுடா ஒட்டுமொத்தத்தில் 4-வது இடத்தைப் பிடித்தார்.

டைமன்ட் லீக் தொடரின் முதல் போட்டி கடந்த மே 9-ம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. அதில் 63.23 மீ. தூரம் வட்டு எறிந்து 2-வது இடத்தை கவுடா, பின்னர் பர்மிங்காமில் ஆகஸ்ட் 24-ம் தேதி நடைபெற்ற 2-வது போட்டியில் 62.78 மீ. தூரம் எறிந்து 5-வது இடத்தைப் பிடித்தார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-வது போட்டியில் 62.90 மீ. எறிந்த கௌடா 7-வது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் ஒட்டுமொத்தத்தில் அவருக்கு 4-வது இடம் கிடைத்தது.

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றவரான போலந்தின் பியோட்டர் மலாசௌஸ்கி டைமன்ட் லீக் போட்டியில் முதலிடத்தையும், உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் ராபர்ட் ஹார்ட்டிங் 2-வது இடத்தையும், எஸ்தோனியாவின் ஜெர்டு கென்டர் 3-வது இடத்தையும் பிடித்தனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x