Published : 18 Mar 2019 09:58 AM
Last Updated : 18 Mar 2019 09:58 AM

மும்பை இந்தியன்ஸ்

3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனில் பல்வேறு ஆட்டங்களில் நெருக்கமாக சென்று தோல்வியை சந்தித்தது. இதனால் ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணி பிளே ஆஃப் சுற்றை எட்ட முடியாமல் வெளியேறியது. வலுவான வீரர்களை உள்ளடக்கிய அந்த அணி மீண்டும் எழுச்சி காணும் முனைப்பில் இந்த சீசனை சந்திக்கிறது.

மொத்த வீரர்கள்: 25

இந்திய வீரர்கள்: 17

வெளிநாட்டு வீரர்கள்: 8

அணிச்சேர்க்கை

தொடக்க வீரர்கள்: எவின் லீவிஸ், குயிண்டன் டி காக், அன்மோல்பிரீத் சிங்

நடுவரிசை வீரர்கள்: ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், சித்தேஷ் லாடு

விக்கெட் கீப்பர்கள்: இஷான் கிஷன், ஆதித்யா தாரே

ரிஸ்ட் ஸ்பின்னர்: மயங்க் மார்க்கண்டே, ராகுல் ஷாஹர்

ஆல்ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, கிருணல் பாண்டியா, பென் கட்டிங், யுவராஜ் சிங், பங்கஜ் ஜெய்ஷ்வால்

விரல் ஸ்பின்னர்: அனுகுல் ராய், ஜெயந்த் யாதவ்

வேகப்பந்து வீச்சாளர்கள்: ஜஸ்பிரித் பும்ரா, ஆடம் மில்னே, மிட்செல் மெக்லீனஹன், ஜேசன் பெஹ்ரன்டார்ப், ரஷிக் சலாம், லஷித் மலிங்கா, பரிந்தர்  சரண்.

பலம்

ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா உள்ளிட்ட இந்திய வீரர்கள் பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் வெளிநாட்டு வீரர்களை தேவையான இடங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 ஐபிஎல் தொடரில் வலுவான நடுவரிசை, பின்கள வரிசை பேட்டிங்கை கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, பென் கட்டிங் ஆகியோர் இறுதிக்கட்ட ஓவர்களில் சராசரியாக 10 ரன்களுக்கு மேல் விளாசக்கூடிய திறன் கொண்டவர்கள்.

ஐபிஎல் தொடரில் வலுவான வேகப்பந்து வீச்சை உள்ளடக்கிய அணிகளில் மும்பை இந்தியஸ் அணியும் ஒன்று. ஜஸ்பிரித் பும்ராவுடன், மலிங்கா, ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரன்டார்ப், மெக்லீனஹன், பரிந்தர் சரண் ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக திகழக்கூடும்.

பலவீனம்

விரல் ஸ்பின்னராக கிருணல் பாண்டியா ரன் குவிப்பை கட்டுப்படுத்துகிறார். ரிஸ்ட் ஸ்பின்னரான மயங்க் மார்க்கண்டே கடந்த சீசனில்

15 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். எனினும் தாக்குதல் வகையிலான பந்து வீச்சு அவரிடம்

இருந்து வெளிப்படுவது இல்லை. மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னராக 19 வயதான போதிய அனுபவம் இல்லாத ராகுல் ஷாஹர் உள்ளார்.

கடந்த இரு சீசன்களிலும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக இல்லாமல் நடுவரிசையில் களமிறங்கினார். இதனால் அவரிடம் இருந்து பெரிய அளவிலான ரன்குவிப்பு வெளிப்படவில்லை. இந்த இரு சீசனிலும் அவரது சராசரி 23.83 மட்டுமே.

மாற்றங்கள்

வெளியேற்றம்: முஸ்டாபிஸூர் ரஹ்மான், பாட் கம்மின்ஸ், அகிலா தனஞ்ஜெயா, ஜேபி டுமினி, சவுரப் திவாரி, தஜிந்தர் சிங், மோஷின் கான், பிரதீப் சங்வான், நித்தேஷ், சரத் லம்பா.

உள் நுழைவு: குயிண்டன் டி காக், யுவராஜ் சிங், பரிந்தர் சரண், லஷித் மலிங்கா.

இதுவரை

2008 லீக் சுற்று

2009 லீக் சுற்று

2010 2-வது இடம்

2011 பிளே ஆஃப்

2012 பிளே ஆஃப்

2013 சாம்பியன்

2014 பிளே ஆஃப்

2015 சாம்பியன்

2016 லீக் சுற்று

2017 சாம்பியன்

2018 லீக் சுற்று

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா நிலைத்தன்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் உலகக் கோப்பைக்கு முன்னதாக பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.

ரன்கள்: 4,493

 சராசரி: 31.86

ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சில ஆட்டங்களில் பும்ராவின் பந்து வீச்சு கைகொடுக்கவில்லை. உலகக் கோப்பை தொடர் நெருங்குவதால் தனது பந்து வீச்சு திறனை பட்டை தீட்டிக்கொள்வதில் பும்ரா தீவிரம் காட்டக்கூடும்.

விக்கெட்கள்:  63

ஸ்டிரைக் ரேட்: 21.71

ஹர்திக் பாண்டியா

டி.வி. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துகள் தெரிவித்த ஹர்திக் பாண்டியா, உலக் கோப்பை தொடர் நெருங்கும் வேளையில் தனது ஆல்ரவுண்டர் திறனை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளார்.

விக்கெட்கள்: 28

ஸ்டிரைக் ரேட்: 21.92

ரன்கள்: 666

சராசரி: 23.78

குயிண்டன் டி காக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தாவியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரன்வேட்டையாடிய டி காக், இந்த சீசனில் கவனிக்கத்தகுந்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.

ரன்கள்: 927

சராசரி: 28.1

கிருணல் பாண்டியா

கிருணல் பாண்டியா கடந்த சில சீசன்களாக அபார திறனை வெளிப்படுத்தி வருகிறார். பந்து வீச்சில் ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் அவர், பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக்கூடியவர்.

விக்கெட்கள்: 28

ஸ்டிரைக் ரேட்: 23.85

ரன்கள்: 708

சராசரி: 30.78

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x