Published : 27 Feb 2019 11:55 AM
Last Updated : 27 Feb 2019 11:55 AM

தினேஷ் கார்த்திக்கைத் தூக்கி விட்டு ஷிகர் தவணைக் கொண்டு வாருங்கள்: சுனில் கவாஸ்கர்

விசாகப்பட்டிணம் டி20 போட்டியில் கே.எல்.ராகுலைத் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப, ‘பினிஷிங் கிங்’ தோனியின் மட்டையிலிருந்து ரன்கள் வருவது அரிதாகிப் போக, உமேஷ் யாதவ்வின் சொதப்பல் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

 

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வென்றேயாக வேண்டிய நிலையில் உள்ளது, பெங்களூருவில் நடைபெறும் இன்றைய போட்டிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளார்.

 

மூன்று விக்கெட் கீப்பர்கள் அணியில் எதற்கு, தினேஷ் கார்த்திக் தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை அவரை நீக்கி விட்டு ஷிகர் தவணைக் கொண்டு வருமாறு கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார்.

 

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

 

இந்திய அணியின் பிளஸ் பாயிண்ட் என்னவெனில் ராகுல் பார்முக்கு வந்துள்ளார். நெருக்கடியில் மயங்க் மார்க்கண்டே அருமையான பொறுமையுடன் வீசினார்.  2 விக்கெட் கீப்பர்களை களத்தில் பவுண்டரி அருகே நிறுத்தும் போது ஆஸ்திரேலியர்களுக்கு கூடுதல் ரன்கள்தான் சேரும்.

 

ராகுலிடம் பிரச்சினையென்னவெனில் அரைசதம் அடித்தவுடன் விக்கெட்டைத் தூக்கி எறிகிறார், அதே போல்தான் அன்று கிளென் மேக்ஸ்வெல் சுலபமாக வெற்றி பெற வேண்டிய தருணத்தில் ராகுல் போலவே விக்கெட்டைத் தூக்கி எறிந்தார். திடீரென 2 புதிய பேட்ஸ்மென்கள் கிரீசில் என்றவுடன் பும்ரா, மார்க்கண்டே சாதுரியமாக வீசினர். ஆனால் உமேஷ் யாதவ் கடைசி ஓவரில் 2 பவுண்டரிகளை கொடுத்து ஆஸி. பக்கம் வெற்றியைத் திருப்பி விட்டார்.

 

உமேஷ் யாதவ் நீண்ட காலம் இந்தியாவுக்கு ஆடியும் வெள்ளைப்பந்தில் நம்பகமான பவுலராக அவர் மாறவில்லை. ஆகவே அவருக்குப் பதிலாக மாற்று வீரரைக் களமிறக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்குப் பிறகே தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. ஆகவே தவணை அணியில் சேர்த்து அவரையும் ரோஹித் சர்மாவையும் தொடக்கத்தில் இறக்கி, 4ம் நிலையில் ராகுலை களமிறக்கினால் நல்லது

 

இவ்வாறு கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x