Published : 05 Jan 2019 12:50 PM
Last Updated : 05 Jan 2019 12:50 PM

7 முறை ஆட்டம் நிறுத்தப்பட்டது.. பந்துகள் அபாயகரமாக எகிறுகின்றன.. பிட்ச்களா இவை? - தெ. ஆ. பிட்ச்கள் குறித்து பாக். பயிற்சியாளர் ஆர்தர் கடும் சாடல்

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொண்டு ஆடியதிலிருந்தே அந்த நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் பிட்ச்கள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன, மிகவும் அபாயகரமான டெஸ்ட் பிட்ச்களாக அவை இருப்பதாக தற்போது பாகிஸ்தான் அணியின் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் மிக்கி ஆர்தரே குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

 

முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் பாகிஸ்தான் தோல்வியில் முடிந்தது, அந்தப் பிட்ச்கள் குறித்தும் சிக்கல்கள் எழுந்தன, தற்போது நியூலேண்ட்ஸ் பிட்ச்களில் பந்துகள் குட் லெந்த்தில் பிட்ச் ஆனாலும் மார்புயரமும் அதற்கு மேலும் அபாயகரமாக எழும்புகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 382/6 என்று வலுவாக உள்ளது, ஆனாலும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கே இந்த பிட்ச் அபாயகரமாக மாறியுள்ளது, டுபிளெசிஸ் விரல்களில்  பந்துகள் பலமுறை தாக்கின. தெம்பா பவுமாவுக்கும் ஒரு பந்து எகிறி அவரைக் காயப்படுத்தியது. இது தொடர்கதையாகி வருவதையடுத்து பாகிஸ்தானின் தென் ஆப்பிரிக்க்க பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கடுமையாகச் சாடியுள்ளார்.

 

“நான் ஏமாற்றமடைந்துள்ளேன். 2010-லிருந்து நான் தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் நிமித்தமாக வந்ததில்லை. இப்போதுதான் புரிகிறது, செஞ்சூரியன் பிட்சும் சரி, இப்போது கேப்டவுன் பிட்சும் சரி டெஸ்ட் போட்டிகளுக்கு லாயக்கற்றதாக இருக்கிறது.

 

7 முறை ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. பந்துகள் பிட்சின் வெடிப்பில் பட்டு எகிறி உடல்களைப் பதம் பார்க்கிறது, 2ம் நாள் ஆட்டத்தில் மட்டும் பலமுறை உடற்தகுதிப் பயிற்சியாளர் களத்திற்கு வரவேண்டியதாயிற்று.  இது 4, 5ம் நாளில் நடந்தால் இதுதான் டெஸ்ட் கிரிக்கெட் என்பதைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் 2வது நாள் ஆட்டத்தில் இந்த நிலைமை என்றால் இந்தப் பிட்ச்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு லாயக்கற்றதே.  முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கே மிகமிகக் கடுமையாக அமைந்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x