Published : 25 Jan 2019 07:31 PM
Last Updated : 25 Jan 2019 07:31 PM

இன்னமும் தனிப்பட்ட சதம் கைகூடவில்லை: சுரங்க லக்மல் அபாரம்; பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

பிரிஸ்பனில் நடைபெறும் பகலிரவு முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 323 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

2ம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை தன் 2வது இன்னிங்சில் 17/1 என்று இன்னமும் 162 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் லபுஷான் 81 ரன்களையும் ட்ராவிஸ் ஹெட் 84 ரன்களையும் எடுத்துள்ளனர், இருவரும் சதக்கூட்டணி அமைத்தனர் ஆனால் இன்னமும் தனிநபர் சதம் கைகூடவில்லை ஆஸ்திரேலியாவுக்கு.

 

லபுஷான் 150 பந்துகளில் பொறுமையாக ஆடி 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்து 81 ரன்களை எடுத்தார், ட்ராவிஸ் ஹெட் 187 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்தார். இருவரும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் லபுஷான் இறங்கி வந்து அடிக்கப் போய் ஷார்ட் மிட் ஆனில் திரிமானேயிடம் கேட்ச் கொடுத்து தனஞ்ஜய டிசில்வாவிடம் வீழ்ந்தார்.

 

ட்ராவிஸ் ஹெட், சுரங்க லக்மல் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார், ரிவியூவும் வீணானது, நடுவர் தீர்ப்பே இறுடி என்று 3வது நடுவர் கைவிரித்து விட்டார், சத வாய்ப்புள்ள இரு பேட்ஸ்மென்களும் வெளியேறினர்.  லக்மல் 75 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 82 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து உறுதி காட்டிய கர்டிஸ் பேட்டர்சன் விக்கெட்டும் அடங்கும். மார்கஸ் ஹாரிஸ் நன்றாக ஆடிவந்த நிலையில் 44 ரன்களில் இன்று காலை லாஹிரு குமாரா பந்தை கட் ஆடி நேராக பாயிண்டில் கேட்ச் ஆனார். இரவுக்காவலன் நேதன் லயன் 1 ரன்னில் சுரங்க லக்மல் பந்தை ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 82/4 என்று ஆஸ்திரேலியா திணறியது.

 

அதன் பிறகுதான் லபுஷான், ஹெட் சதக்கூட்டணி அமைத்து 5வது விக்கெட்டுக்காக ஸ்கோரை 248 ரன்கள் என்று உயர்த்தினர். டிம் பெய்ன், கமின்ஸ் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேற அறிமுக வீரர் கர்டிஸ் பேட்டர்சன் மட்டும் 30 ரன்கள் எடுத்தார், மிட்செல் ஸ்டார்க் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

 

இலங்கை தரப்பில் சுரங்க லக்மல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற பெரேரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட முடிவில் இலங்கை அணி கருணரத்ன (3) விக்கெட்டை பேட் கமின்ஸிடம் இழந்து 17/1 என்று உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x