Published : 19 Jan 2019 06:43 PM
Last Updated : 19 Jan 2019 06:43 PM

தோனியின் ஓர் ஆஸ்திரேலிய சாதனை: சச்சின், கோலி, ரோஹித் வரிசையில் இணைந்தார்

ஆஸ்திரேலியாவில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த தோனி, 3 அரைசதங்களுடன் 193 ரன்களை 193 என்ற சராசரியில் எடுத்துள்ள முடிசூடா பினிஷிங் மன்னன் ஆஸி. மண்ணில் சாதனை ஒன்றை நிகழ்த்தி சச்சின் கோலி, ரோஹித் சர்மா வரிசையில் 4வதாக இணைந்தார்.

 

மெல்போர்னில் 87 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்த தோனி ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைப் பூர்த்தி செய்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

இதற்கு முன்பாக சச்சின், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரே இந்த வரிசையில் இருந்தனர்.

 

மெல்போர்ன் போட்டி இன்னிங்சில் 36 ரன்கள் எடுத்த போது தோனி இந்தச் சாதனையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியாவில் 35 போட்டிகளில் 31 இன்னிங்ஸ்களில் 1053 ரன்களை தோனி எடுத்துள்ளார். சராசரி 47.86. இதில் 8 அரைசதங்கள் அடங்கும்.

 

சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் 46 இன்னிங்ஸ்களில் 1491 ரன்களை எடுத்துள்ளார், சராசரி 34.67, 1 சதம் 10 அரைசதங்கள், அதிகபட்ச ஸ்கோர் 117 நாட் அவுட்.

 

விராட் கோலி 26 இன்னிங்ஸ்களில் 1154 ரன்களை 50.17 என்ற சராசரியில் 5 சதங்கள் 4 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

 

ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய மண்ணில் 30 இன்னிங்ஸ்களில் 1328 ரன்களை 53.12 என்ற சராசரியில்  5 சதங்கள், 4 அரைசதங்களுடன் 171 என்ற அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருடன் எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x