Published : 12 Jan 2019 08:18 PM
Last Updated : 12 Jan 2019 08:18 PM

ராயுடுவை விட 4-ம் நிலையில் களமிறங்க தோனியே சிறந்தவர் என்பது என் தனிப்பட்ட கருத்து: ரோஹித் சர்மா

உலகக்கோப்பைக்காக சரியான அணிச்சேர்க்கை, டவுன் ஆர்டர்கள் பற்றி பரிசீலித்து வரும் இந்திய அணிக்கு அறிவுரை கூறும் விதமாக துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 4ம் நிலையில் களமிறங்க தோனியே ராயுடுவைச் சிறந்த தெரிவு என்று கருத்துக் கூறியுள்ளார்.

 

தோனி இன்று 96 பந்துகளில் 51 ரன்களைத் தட்டுத் தடுமாறி எடுத்ததோடு ரோஹித் சர்மாவின் ரிதமையும் கெடுத்தார், ஆனால் அது புரியாமல் ரோஹித் சர்மா தோனியை இன்னும் முன்னால் களமிறக்க வேண்டும்  என்று கூறுகிறார்.

 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

 

ராயுடு 4-ம் நிலையில் உண்மையில் நன்றாகவே ஆடியுள்ளார்.  ஆகவே இது முழுக்க முழுக்க கேப்டன், அணி நிர்வாகம் எடுக்க வேண்டிய முடிவு, ஆனால் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் தோனி 4ம் நிலையில் இறங்குவதிலேயே எனக்கு மகிழ்ச்சி.

 

தோனி இன்று பேட் செய்ய வந்த போது 3 விக்கெட்டுகள் சென்று விட்டன, அவர்களும் நன்றாக வீசினர், ஆகவே பவுலிங்கை மதிக்க வேண்டும். நானே கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டேன், நான் வழக்கமாக விரைவு கதியில் சேர்ப்பது போல் சேர்க்கவில்லை. அந்த நேரத்தில் இன்னொரு விக்கெட் போனால் ஆட்டம் செத்திருக்கும்.அதனால்தான் டாட்பால்கள் நிறைய ஆனது. முன்னெடுத்துச் செல்வதையே பிரதானமாகக் கொண்டிருந்தோம்.

 

அணி எப்போது விரும்புகிறதோ அப்போது வந்து அவர் பேட் செய்வதே நல்ல அறிகுறிதான்.

 

ராயுடு அவுட்டுக்கு ரிவியூ கேட்டது, கொஞ்சம் ‘ட்ரிக்கி’ சூழ்நிலைதான், ஏனெனில் எப்போது ரிவியூ கேட்க வேண்டும், அல்லது கேட்க வேண்டாம் என்ற முடிவு சுலபமல்ல, ராயுடு பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றதாக நினைத்தார். நானும் அதைத்தான் நினைத்தேன். எப்போதும் இதில் சரியாக முடிவெடுக்க முடியாது. ஆனால் டிஆர்எஸ் முறையை சரியாகப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் பேசிவருகிறோம். கண நேரத்தில் எடுத்தாக வேண்டும். அடிலெய்ட் போட்டியில் இது குறித்து பேசி முடிவெடுப்போம், இப்போது முடிந்த கதை முடிந்ததுதான்.

 

ஜடேஜா கடைசியில் இறங்கி குறைந்த பந்துகளில் அதிக ரன்களை சிறு அதிரடி இன்னிங்சில் ஆட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்,  ஆனால் அவர் இன்று இறங்கும்போது தேவைப்படும் ரன் விகிதம் கூடுதலாக  இருந்தது.  ஆகவே புதிதாக இறங்குபவர்களுக்கு எடுத்த எடுப்பில் அடிப்பது கடினமே.  சில வேளைகளில் 6,7,8-ம் நிலைகளில் இறங்குபவர்கள் முக்கிய அந்த ரன்களை எடுக்க நேரிடும், நாங்கள் ஜடேஜா மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.

 

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x