Published : 22 Jan 2019 13:37 pm

Updated : 22 Jan 2019 13:39 pm

 

Published : 22 Jan 2019 01:37 PM
Last Updated : 22 Jan 2019 01:39 PM

‘இன்னொரு கில்கிறிஸ்ட், ரிஷப் பந்த்’: ஐசிசி விருதுக்கு முன்னாள் வீரர்கள் புகழாரம்

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரராக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டியுள்ளனர், மற்றொரு கில்கிறிஸ்ட் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று 2018-ம் ஆண்டுக்கான விருதுகளை இன்று அறிவித்தது. இதில் சிறந்த வீரர், ஒருநாள், டெஸ்ட் போட்டி வீரர் ஆகிய 3 விருதுகளும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அறிவிக்கப்பட்டது. வளர்ந்துவரும் வீரருக்கான விருது இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரராக வலம் வந்த ரிஷப் பந்த், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளைப் பிடித்து அதிக கேட்ச் பிடித்த வீரரின் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்தார்.

ரிஷப் பந்த் குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “ உண்மையாகத் திறமையுள்ள, பந்தை கணித்து அடிக்கக் கூடிய வீரர் ரிஷப் பந்த், போட்டி எப்படி செல்லும் என்பதையும் கணிக்கும் திறமை பெற்றுள்ளார். இன்னும் பேட்டிங்கில் சிறிது பயிற்சி எடுத்தால், மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருவார்.

இந்திய கிரிக்கெட்டில் அதிகமான தாக்கங்களை ஏற்படுத்தியவர் என்பதில் தோனியை அடிக்கடி குறிப்பிடுவோம், ஏராளமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும் 6 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால், ரிஷப் பந்த் அறிமுகமான சில போட்டிகளிலேயே 2 சதங்கள் அடித்துவிட்டார். என்னைப் பொருத்தவரை மற்றொரு கில்கிறிஸ்ட் போல ரிஷப் பந்த் தெரிகிறார்” என புகழ்ந்துள்ளார்.

ஆடம் கில்கிறிஸ்ட் கூறுகையில், “ கிரிக்கெட் வீரராக வாழ்க்கையைத் தொடங்கியுள்ள ரிஷப்பந்த், போட்டியின் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வார். சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகுவதற்கு நல்ல அடித்தளத்தை ரிஷப் பந்த் பெற்றுவிட்டார். அவரின் ஆட்டத்தைப்பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும் “எனத் தெரிவித்துள்ளார்.

ராகுல் திராவிட் கூறுகையில் “ உண்மையில் மிகவும் திறமையுள்ள வீரர் ரிஷப் பந்த். 3 அல்லது 4 இன்னிங்ஸ்களில் தனது வித்தியாசமான பேட்டிங் திறமையை காட்டிவிட்டார். ரிஷப் பேட்டிங் செய்யும் விதத்தை நான் நன்கறிவேன்.

2017-18 ரஞ்சி சீசனில் 900 ரன்களுக்கு மேல் ரிஷப் சேர்த்தார்,ஸ்ட்ரைட் ரேட்டும் 100க்கு மேல் இருந்தது. ஐபிஎல் போட்டியிலும் அதிரடியாக ஆடக்கூடியவர். அவரின் நிலைத்தன்மையும், திறமையும் வித்தியாசமாக இருக்கும். சூழ்நிலையை அறிந்து கொண்டு அதிரடியாக ஆடி எதிரணியை நிலைகுலைய வைக்கும் வீரர் “ எனத் தெரிவித்துள்ளார்.

1. 2018-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ரிஷப் பந்த், 4 முறை 90 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த வீரரும் இதுபோல் பேட் செய்து ரன் குவித்தது இல்லை.

2. வெளிநாடுகளில் சென்று 2 சதங்களை ரிஷப் பந்த் அடித்துள்ளார். எந்த விக்கெட் கீப்பரும் குறுகிய காலத்தில் இதுபோல் சதம் அடித்தது இல்லை.

3. இங்கிலாந்து சென்று சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் எனும் பெருமையை ரிஷப்பந்துக்கு உண்டு. அதேபோல ஆஸ்திரேலியாவிலும் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் ஜொலிக்கிறார்

4. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப்பந்தின் ஸ்டிரைக் ரேட் 74. எந்த வீரரும் இதுபோல் குறுகிய காலத்தில் டெஸ்ட் போட்டியில் 500 ரன்களுக்கு மேல் வேகமாகச் சேர்த்தது இல்லை.

5. அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 கேட்சுகளை ரிஷப் பந்த் பிடித்தார். எந்தவிக்கெட் கீப்பரும் அதிகமான கேட்சுகளைப்பிடித்தது இல்லை. இங்கிலாந்தின் ஜேக் ரஷல், தென் ஆப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ் சாதனையை ரிஷப் சமன் செய்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    ஐசிசி விருதுகள்வளர்ந்து வரும் வீரர்ரிஷப் பந்த்மற்றொரு கில்கிறிஸ்ட்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author