Published : 03 Dec 2018 11:23 AM
Last Updated : 03 Dec 2018 11:23 AM

ஹாக்கியில் இந்தியா - பெல்ஜியம் ஆட்டம் டிரா

உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகளிடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

இந்த ஹாக்கி தொடர் ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரிலுள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடை பெற்று வருகிறது. சி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணி வீரர் ஹென்ரிக் அலெக்சாண்டர் ஒரு கோல் போட்டு அணியை முன் னிலை பெற வைத்தார். பெனால்டி கார்னர் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித் தார் ஹென்ரிக். இதன்மூலம் பெல் ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளை வரை இந்த நிலை நீடித்தது. இடைவேளைக்குப் பிறகு இந்திய வீரர்கள் ஆக்ரோஷத்துடன் விளையாடினர். 39-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஷூட் வாய்ப்பை கோலாக மாற்றினார் இந்திய வீரர் ஹர்மன் பிரீத். இதையடுத்து 1-1 என்ற கணக்கில் ஆட்டத்தில் சமநிலை ஏற்பட்டது.

தொடர்ந்து 47-வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரன்ஜித் ஒரு கோலும், 56-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கவுக்நார்ட் ஒரு கோலும் போட்டனர். இதனால் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

அடுத்த கோலடிக்க இரு அணி வீரர்களும் முயற்சி செய்தபோதும் அது பலனளிக்கவில்லை. இறுதி வரை இந்த நிலை நீடித்ததால் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x