Published : 27 Dec 2018 08:22 AM
Last Updated : 27 Dec 2018 08:22 AM

17-வது சதமடித்தார் புஜாரா; கங்குலியைக் கடந்தார்; கோலி அவுட்: சொத்தை மெல்போர்ன் பிட்சில் இந்தியா ஆதிக்கம்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

 

தனது 17வது சதத்தை எடுத்த செடேஷ்வர் புஜாரா 294 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.  விராட் கோலி 69 ரன்களுடன் களத்தில் இருந்தவர் உணவு இடைவேளை முடிந்து 82 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பவுன்சரை அப்பர் கட் செய்ய தேர்ட்மேனில் குறிபார்த்து ஏரோன் பிஞ்ச் கையில் போய் உட்கார்ந்தது. கோலி சத வாய்ப்பை இழந்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் கங்குலியின் 16 சதங்களை புஜாரா கடந்து 17வது சதமெடுத்துள்ளார்.  தற்போது சதங்களில் திலிப் வெங்சர்க்கார், விவிஎஸ். லஷ்மண் ஆகியோருடன் சமநிலையில் உள்ளார்.  இந்த செஷனில் இந்திய அணி 62 ரன்களையே எடுத்துள்ளது.

 

தொடரை இழந்து விடும் அச்சத்தில் சொத்தை பிட்ச், டெட் பிட்சை ஆஸ்திரேலியர்கள் அமைத்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்திய பேட்ஸ்மென்களும் இந்நேரம் அடித்து ஆடத் தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் தளர்வான பந்துகளைக் கூட ஆடாமல் விட்டு விடும் போக்குதான் தெரிகிறது. முதல் 20 நிமிடங்கள் கோலி இந்த டெட் பிட்சிலும் திணறினார்

 

விராட் கோலிக்கு இந்தப் பிட்சிலும் எட்ஜ் எடுக்கவே செய்கிறது. ஏதோ அதிர்ஷ்டத்தில் அவருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது, எட்ஜ்கள் பீல்டருக்கு முன்னால் விழுந்து செல்கிறது. நேதன் லயனை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் புஜாரா.  இந்த செஷனின் சிறப்பான ஷாட் கோலி அடித்த நேர் ஆன் ட்ரைவ், இதை சச்சின் நேர் டிரைவுடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார்கள் வர்ணனையாளர்கள்.

 

லயன் பந்தை மிட் ஆஃபைத் தாண்டி பவுண்டரி அடித்து புஜாரா தன் சதத்தை எடுத்து முடித்தார்.  கோலி, புஜாராவை ஆரத்தழுவினார்.

 

தன்னுடைய மொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் நேதன் லயனின் 236 பந்துகளுக்கு புஜாரா மேலேறி வந்து ஆடியுள்ளாராம்... என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இவருக்கு அடுத்தபடியாக முரளி விஜய் 77 முறை நேதன் லயனை மேலேறி வந்து ஆடியுள்ளாராம்..

 

உணவு இடைவேளை முடிந்து விராட் கோலி 82 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 293/3. ரஹானே இறங்கியுள்ளார். கோலி விக்கெட்டுடன் பவுன்சரில் 3 விக்கெட்டுகளுமெ விழுந்துள்ளது, புஜாராவும் கோலியும் இணைந்து 170 ரன்கள் சேர்த்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x