Published : 11 Sep 2014 12:24 PM
Last Updated : 11 Sep 2014 12:24 PM

கிரிக்கெட்டில் பெண்களை பயன்படுத்தும் சூதாட்ட தரகர்கள்: நியூசிலாந்து போலீஸார் எச்சரிக்கை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது கிரிக்கெட் வீரர்களை மடக்க இளம் பெண்களை சூதாட்ட தரகர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக நியூஸிலாந்து போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் முன் அறிமுகம் இல்லாத பெண்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2015 பிப்ரவரி 14 முதல் மார்ச் 29-ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பை போட்டி

களை மையமாகவைத்து சூதாட்டம் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பெருமளவில் பணம் புரளும் என்பதால் கிரிக்கெட் வீரர்களை தங்களுக்கு சாதகமாக வளைக்க அனைத்து முறைகளையும் கையாளுவார்கள். எனவே சூதாட்டத்தை தடுக்க இப்போது முதலே ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்களும், அவர்களுடன் வரும் மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் முன் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்க்க வேண்டும்.

எனெனில் அவர்களுக்கு கிடைக்கும் சிறு தகவல்கள் கூட சூதாட்ட தரகர்களிடம் சென்றுவிடும். எனவே தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

அனைத்து கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் சேகரித்துள்ள சூதாட்ட தரகர்கள். அவர்களது பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றனர். சூதாட்ட தரகர்கள் வீரர்களை அணுகுவதை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

அதையும் மீறி தவறுகள் நடக்காமல் இருக்க வீரர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நியூஸிலாந்து போலீஸார் எச்சரித்துள்ளனர். நியூஸிலாந்து ஹெரால்ட் பத்திரிகையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x