Last Updated : 03 Dec, 2018 02:59 PM

 

Published : 03 Dec 2018 02:59 PM
Last Updated : 03 Dec 2018 02:59 PM

தெ.ஆ., இங்கிலாந்தில் கோலியைத் தவிர மற்ற இந்திய பேட்ஸ்மென்கள் ஒன்றும் ஆடவில்லை: ஜோஷ் ஹேசில்வுட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் 6-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் எப்போதும் எதிரணி கேப்டனைக் குறிவைக்கும் ஆஸ்திரேலிய அணி இந்த முறை விராட் கோலியைக் கண்டு கொஞ்சம் அதிகமாகவே நடுங்குகிறது. ஏனெனில் கடந்த தொடரில் மிட்செல் ஜான்சன், ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோர் பந்து வீச்சுக்கு எதிராகத்தான் 692 ரன்களை 4 சதங்களுடன் விராட் கோலி சாதித்தார்.

இந்நிலையில் இந்திய பேட்டிங் வரிசை கோலியைச் சுற்றி நன்றாக உள்ளதாகக் கூறும் ஆஸ்திரேலிய துணைக் கேப்டன் ஜோஷ் ஹேசில்வுட் இந்தத் தொடர் பற்றி மேலும் கூறியதாவது:

“இந்திய பேட்டிங் வரிசை உலகில் சிறந்த வரிசையாக உள்ளதாக கருதுகிறேன். அதாவது அந்த இடத்தில் இல்லை என்றாலும் விராட் கோலி தலைமையில் அவரைப்பற்றி நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன அவர் எப்படி விளையாடுவார் என்பது போன்ற விஷயங்கள் அலசப்பட்டு வருகின்றன.

கடைசியாக இந்தியாவுடன் ஆஸ்திரேலியாவில் நாங்கள் ஆடிய பிறகு இந்திய அணி அதிகம் உள்நாட்டில்தான் ஆடி வந்தனர். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்துப் பயணம் மேற்கொண்டனர், அங்கெல்லாம் விராட் கோலிதான் நன்றாக ஆடினார், மற்றவர்கள் பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை.

ஆகவே ஆட்டம் தொடங்கும் முன்பு கோலிக்கு என்ன திட்டம் என்பது பற்றி அலசுவோம். எப்படியும் ஒன்றிரண்டு தெரிவுகள் இருக்கிறது. அவருடைய திறமை அளவுக்கு என்னென்ன ட்தெரிவுகள் உள்ளன என்பதை பேசி முடிவு செய்வோம். ஆனால் ஸ்லெட்ஜிங், வசைபாடுதல் போன்றவை இந்தத் தெரிவுகளில் நிச்சயமாக இல்லை. காரணம் விராட் அப்படியெல்லாம் செய்தால் கண்டு கொள்ள மாட்டார். மேலும் அது அவரை வலுவடையச் செய்யும். ஸ்லெட்ஜிங் செய்தால் அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுவார், ஆகவே அதுவல்ல எங்கள் தெரிவு. நான் பொதுவாக பவுலிங் செய்யும் போது அமைதியாகவே வீசுவேன்.

முதல் டெஸ்ட் போட்டியில் விரைவில் சில விக்கெட்டுகளை வீழ்த்தி வழியைத் திறந்து விட்டால் நல்லது, முதல் இன்னிங்ஸ் எப்போதும் முக்கியமானது. தொடக்கத்திலேயெ அவர்களை ஆதிக்கம் செலுத்தி விட்டால் மீதமுள்ள நாட்களிலும் அது பயனளிக்கும்.

யாருக்கு வெற்றி என்பதில் இரு அணிகளுக்கும் சமவாய்ப்புகளே, உள்ளன, என்ன இருந்தாலும் இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணி. நாங்களும் எங்கள் நாட்டில் சிறப்பாக ஆடுவோம், ஆகவே இது சம வாய்ப்புள்ள தொடராகவே இருக்கும்.  எங்கள் பந்து வீச்சு மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆஷஸில் எங்கள் பவுலிங் கை கொடுத்தது, ஆகவே அதை உலகின் நம்பர் 1 அணிக்கு எதிராகவும் பயன்படுத்துவோம்.

அடிலெய்ட் ஓவல், பெர்த் மைதானங்களில் ரிவர்ஸ் ஸ்விங் வாய்ப்பில்லை. எனவே ரிவர்ஸ் ஸ்விங் பெரிய அளவுகு உதவாது என்றே கருதுகிறேன். எங்களுடன் நேதன் லயன் பவுலிங்கும் மிக முக்கியமானது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” இவ்வாறு கூறினார் ஜோஷ் ஹேசில்வுட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x