Published : 05 Dec 2018 07:42 AM
Last Updated : 05 Dec 2018 07:42 AM

வரிசையாக அந்த 3 ‘டக்’ அவுட்கள் என்னைக் கடுமையாகத் தாக்கின: கவுதம் கம்பீர் வேதனை

இந்தியாவின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர், சேவாகுடன் சேர்ந்து சிலபல பவுலர்களை இருவரும் அச்சுறுத்திய காலத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட கடினமான பிட்ச்களில் தைரியமான டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிய கவுதம் கம்பீர், அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.

சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் அவர் தன்னை மிகவும் தாக்கிய விவகாரம் குறித்து பேசியுள்ளார்:

“2014 ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட் ஆனது என் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.  பிறகு அதே ஆண்டில் இங்கிலாந்து தொடர் படுமோசமாக அமைந்தது.  2016-இல் ராஜ்கோட் டெஸ்ட்டுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக அணியிலிருந்து நீக்கப்பட்டேன்.

அந்த ஆழமான இருண்ட குழியிலிருந்து கொண்டு நான் தன்னம்பிக்கையைத் தேடிக்கொண்டிருந்தேன். ஆனால் ‘முடிந்து விட்டது கவுத்தி’ என்ற கூர்மையான, தொந்தரவு செய்யும் சப்தங்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன.

என் காலத்தில் இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாகத் திகழ்ந்தது. 2009-ல் ஐசிசி சிறந்த பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்யப்பட்டது என் இனிய நினைவுகளில் ஒன்று.  என்னைப் போன்ற உத்தி ரீதியாக காபிபுக் ஸ்டைல் வீரருக்கு என்னுடைய ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்று தெரிந்த எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாக இந்த விருதைப் பார்க்கிறேன்.

நியூஸிலாந்தில் வரலாற்று தொடர் வெற்றி, ஆஸ்திரேலியாவில் சிபி சீரீஸ் வெற்றி ஆகியவை என் சிந்தனையில் என்றும் இனியவையாகும்.  ஆனால் இப்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி எங்கள் சாதனைகளை உடைத்தெறியும் திறமை கொண்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x