Published : 10 Dec 2018 10:09 AM
Last Updated : 10 Dec 2018 10:09 AM

உலக சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்; மைல்கல்லை எட்டுவாரா?

அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்துவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகமான கேட்சுகளை பிடித்த வீரர்கள் பட்டியலில் உலக சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.  ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷெல் ஸ்டார்க் அடித்த பந்தை கேட்ச் பிடித்தபோது இந்த சாதனையை ரிஷப் பந்த் செய்தார். உலக அளவில் அதிகமான கேட்சுகளைப் பிடித்த வீரர் எனும்சாதனை படைக்க ரிஷப் பந்துக்கு இன்னும் ஒரு கேட்ச் மட்டுமே தேவை. அதை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

இதுவரை உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.

இதற்கு முன் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேக் ரஷல், தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோர் மட்டுமே 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜேக் ரஷல் கடந்த 1995-ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 11 'கேட்சுகளைப்' பிடித்தார்.

2013-ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்ப போட்டியில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டீவில்லியர்ஸ் 11 'கேட்சுகளைப்' பிடித்தார். தற்போது இந்தச் சாதனையை ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் அதிகமான கேட்ச்குளை பிடித்த வீரர் என்ற பெருமையை இதுவரை விர்த்திமான் சஹா வைத்திருந்தார். அவர் 10 கேட்சுகள் வரை பிடித்திருந்தார். இப்போது அந்த சாதனையையும் ரிஷப் பந்த் முறியடித்துவிட்டார். 3-வது இடத்தில் தோனி 9 'கேட்சுகளைப்' பிடித்துள்ளார்.

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ரஷலுக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பாப் டெய்லர், ஆடம் கில்கிறிஸ்ட், விர்திமான் சஹா உள்ளனர்.

இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பந்த் 31 கேட்சுகள் பிடித்துள்ளார். 21 வயதான ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார், பேட்டிங்கிலும் முக்கியமான நேரங்களில் நிலைத்து ஆடி ரன்களைச் சேர்க்கும் திறமை உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x