Published : 22 Nov 2018 10:29 AM
Last Updated : 22 Nov 2018 10:29 AM

கிரேம் ஹிக்கைத் தூக்க வேண்டிய நேரம் வந்து விட்டது: பாண்டிங்கைக் கொண்டு வாருங்கள்- ஷேன் வார்ன் ஆலோசனை

பேட்டிங் பயிற்சியாளர் கிரேம் ஹிக்கை நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது, அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரேட்களான ரிக்கி பாண்டிங், மார்க் வாஹ் ஆகியோரைக் கொண்டு வாருங்கள் என்று ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் அறிவுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரேம் ஹிக் இருந்து வருகிறார். கடந்த 24 போட்டிகளில் 18 போட்டிகளில் ஆஸ்திரேலியா அனைத்து வடிவங்களிலும் தோல்வி கண்டுள்ளது.

இதனையடுத்து பேட்டிங் பயிற்சியாளரை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.

“ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கடந்த 25-30 ஆண்டுகளாக மிகப்பெரிய வீரர்கள் இருந்துள்ளனர். கிரேம் ஹிக் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஆனால் பேட்ஸ்மென்கள் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கின்றனர்.

மாற்ற வேண்டிய நேரம் இதுவே. மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், மைக் ஹஸ்ஸி, ஆகியோர் நிச்சயம் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவசியம். பவுலிங்கில் கிளென் மெக்ரா என்று நம்மிடையே கிரேட் பிளேயர்கள் உள்ளனர். இவ்வாறு நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்றார் ஷேன் வார்ன்.

அதே போல் ஸ்மித், வார்னர், பேங்கிராப்டுக்கு விதிக்கப்பட்ட தடை மிகவும் கடுமையானதாக இருந்தாலும் விதித்த தடையை, ஆஸ்திரேலியா அணி மோசமாக பேட்டிங் செய்கிறது என்பதற்காக ரத்து செய்வது அபத்தம் என்று கூறியுள்ளார் ஷேன் வார்ன்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x