Last Updated : 16 Nov, 2018 02:48 PM

 

Published : 16 Nov 2018 02:48 PM
Last Updated : 16 Nov 2018 02:48 PM

நியூசி ஏ அணியை துவம்சம் செய்த இந்திய ஏ: பிரித்வி ஷா, விஹாரி, பர்தீவ் அபாரம்; ரஹானே, விஜய் சொதப்பல்

நியூசிலாந்தின் மவுன்ட்மவுன்கானியில் அந்நாட்டு ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய ஏ அணி முதல்நாளில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய வீரர்கள் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, பர்தீப் படேல் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினார்கள். இவர்கள் மூன்றுபேரும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆனால், கேப்டன் ரஹானேவும், முரளி விஜயும் ஏமாற்றினார்.

நியூசிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய ஏ அணி அந்நாட்டு ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 நாட்கள் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுன்கானி நகரில் இன்று தொடங்கியது.

இந்திய ஏ அணியில் இடம் பெற்றுள்ள பர்தீவ் படேல், பிரித்வி ஷா, ரஹானே, ஹனுமா விஹாரி, முரளி விஜய் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். டாஸ் வென்ற இந்திய ஏ அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

 

முரளிவிஜய், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினார்கள். சிறிது நேரமே தாக்குப்பிடித்த முரளிவிஜய் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தொடரில் சொதப்பிய முரளிவிஜய் இங்கும் சொதப்புகிறார். இங்கிலாந்து கவுண்டி போட்டியில் சிறப்பாக பேட் செய்தார் என்பதை மனதில் வைத்து அணியில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று இவரின் பேட்டிங் மோசமாக அமைந்திருந்தது.

2-வது விக்கெட்டுக்கு ஹனுமா விஹாரியும், பிரித்வி ஷாவும் 50 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். பிரித்வி ஷா ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் உள்ளிட்ட 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

மயங்க் அகர்வால் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்தில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹனுமா விஹாரி இந்த போட்டியில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.ரஹானே 12 ரன்களில் வெளியேறினார்.

5-வது விக்கெட்டுக்கு பர்தீவ் படேல், விஹாரி கூட்டணி 138 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பர்தீவ் படேல் 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து ஏ தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் டிக்னர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x