Published : 07 Nov 2018 11:57 AM
Last Updated : 07 Nov 2018 11:57 AM

வேண்டாம் ரிஷப் பந்த்... வேண்டும் தோனி: ரிஷபை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

குறந்த ஓவர் கிரிக்கெட்டில் ரிஷப் பந்த் மீண்டுமொரு முறை நேற்று சொதப்பினார், 5 ரன்களில் லக்னோவில் அவர் ஆட்டமிழந்தார்.  ஒருநாள் போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களில் 41 ரன்களை எடுத்தார், இதனையடுத்து வேண்டாம் ரிஷப் பந்த், வேண்டும் தோனி என்ற சப்தம் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதாவது தோனியை நீக்கி விட்டு ரிஷப் பந்த்தை கொண்டு வந்திருப்பதால் நாங்கள் அவரை நெருக்கமாக அவதானித்து வருகிறோம், அவர் தோனிக்கு மாற்றாகாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜிதேந்திரா சிங் என்ற ட்விட்டர்வாசி, 5 ரன்கள் எடுக்கும் ரிஷப் பந்த் என் தோனிக்கு மாற்றா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னொரு ட்விட்டர்வாசி மிகவும் கிண்டலாக ரிஷப் பந்த் பேசுவது போல் எழுதியுள்ளதில், ‘ஷிகர் அவுட் ஆனவுடன் மகிழ்ந்தேன், ரோஹித்துக்கு முன்னதகா 100 அடிக்க விரும்பினேன். எல்லாபந்தையும் சிக்ஸ் அடிக்க முயன்றேன். எதிரணி பௌலர்களை எந்த அளவுக்குச் சிதைக்க முடியும் என்று நான் காட்ட வேண்டாமா?’ என்று கேலி செய்துள்ளார்.

மற்ற ட்விட்டர்வாசிகள் மிடில் ஆர்டரில் ரிஷப் பந்த் தேறமாட்டார், தோனியை உடனடியாகக் கொண்டு வாருங்கள் என்று தோனிக்கு வக்காலத்து வாங்கி நிறைய பதிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x