Published : 01 Oct 2018 06:33 PM
Last Updated : 01 Oct 2018 06:33 PM

சேவாக் நடுங்கிய பவுலர்... சேவாகைக் கண்டு நடுங்கிய பவுலர்: இந்திய-பாக். வீரர்கள் ருசிகரம்

சேவாகிற்கும், ஷாகித் அப்ரீடிக்கும் இடையே பேட்டிங்கில் ஆழமான வேறுபாடுகள் இருந்தாலும் இருவரும் அதிரடி வீரர்கள் என்ற அளவில் எதிரணி பவுலர்கள் நடுங்கும் பேட்ஸ்மென்கள் என்பதில் ஐயமில்லை.

மற்றபடி உத்தி ரீதியாக சேவாக் எங்கோ இருக்கிறார், அப்ரீடி எங்கோ இருக்கிறார். சேவாக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னி. அடித்த 195, பிறகு அடிலெய்டில் எடுத்த 155 ரன்களுக்கு ஈடு இணையாக அப்ரீடியின் இன்னிங்ச் எதையும் டெஸ்ட் போட்டிகளில் சொல்ல முடியாது. இதுதவிர 2 முச்சதங்கள், ஒரு 293 என்று பின்னி பெடலெடுத்தவர் சேவாக், அப்ரீடி ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் எடுத்து உலக சாதனையை நீண்ட காலம் வைத்திருந்தார், இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 45 பந்திலும் சதமடித்துள்ளார்.

இந்நிலையில் யுசி பிரவுசர் லைவ் வீடியோ சாட் ஒன்றில் சேவாக் கூறும்போது, “ஒரேயொரு பவுலர் நான் பயந்தது என்றால் அது ஷோயப் அக்தர்தான். எந்தப் பந்தில் உங்கள் காலைப் பதம்பார்ப்பார், எந்தப் பந்தில் உங்கள் தலையைப் பதம்பார்ப்பார் அக்தர் என்று கூற முடியாது. என் தலையை நிறைய பவுன்சர்களால் அவர் பந்துகள் தாக்கியுள்ளன. அவரைக் கண்டு உண்மையில் பயந்தேன், ஆனால் அவர் பந்துகளை அடித்தும் மகிழ்ந்துள்ளேன்” என்றார் சேவாக்.

அப்ரீடி மாறாக தனக்கு யாரைக்கண்டும் பயமில்லை என்று கூறினார், ஆனால், “நான் பவுலிங் செய்யும் போது கூட எந்த பேட்ஸ்மெனைக் கண்டும் அஞ்சியதில்லை, ஆனால் ஒரேயொரு பேட்ஸ்மென் அது சேவாக், அவரைக் கண்டு நான் அஞ்சுவேன். சேவாகுக்கு பவுலிங் போடுவது கடினம்” என்றார்.

இதே உரையாடலில் 2007 டி20, 2011 உலகக்கோப்பையில் வென்றது தன் வாழ்நாளின் சிறந்த தருணம் என்றார் சேவாக். 2009 டி20 உலகக்கோப்பை வெற்றி மறக்க முடியாது என்றார் ஷாகித் அப்ரீடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x