Published : 14 Oct 2018 03:20 PM
Last Updated : 14 Oct 2018 03:20 PM

இர்பான் பத்தான் கண்டுபிடிப்பு: 17 வயது ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளருக்கு மும்பை இந்தியன்ஸ் அழைப்பு

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 17 வயது வேகப்பந்து வளரும் வீச்சாளர் ராசிக் சலாம் என்ற வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பயிற்சிகளுக்காக அழைத்தது.

விஜய் ஹசாரே கோப்பையில் ராசிக் சலாம் கவனத்தை ஈர்க்கும் விதமாக வீசியதால் அவரை மும்பை இண்டியன்ஸ் 2019 ஐபிஎல் கிரிக்கெட்டை கருத்தில் கொண்டு அழைத்துள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிராக ராசிக் சலாம் அறிமுக விஜய் ஹஜாரே டிராபி போட்டியில் ஆடினார். மூத்த அணிக்கு வருவதற்கு முன்னால் தன் வயதையொத்த எந்த ஒரு கிரிக்கெட் தொடரிலும் அவர் ஆடியதில்லை. இர்பான் பத்தான் அணியின் நன்னம்பிக்கை ஆலோசகராகச் சேர்ந்ததால் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெற்கு காஷ்மீரில் உள்ள சிறிய கிராமமான குல்காம் இவரது ஊர். இவர் நல்ல வேகத்துடன் இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமை உள்ளவர். அனுபவமிக்க தமிழ்நாடு அணிக்கு எதிராக 8 ஓவர்களில் 45 ரன்களுகு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜம்மு காஷ்மீர் இந்தப் போட்டியை வென்றது.

இந்த வயதில் இவ்வளவு வேகம் ஸ்விங் இருக்கும் ஒர் பவுலர் அரிது என்ற வகையில் இவரைப்பார்த்து அசந்து போன மும்பை இந்தியன்ஸின் அசோசியேட் உறுப்பினர் ஒருவர் ராசிக் சலாமை பயிற்சிக்கு அழைத்துள்ளார்.

திறன் கண்டுபிடிப்பு திட்டத்தின் மூலம் இர்பான் பத்தானால் கண்டறியப்பட்டவர் ராசிக் சலாம். பர்வேஸ் ரசூலும் இவரைப் பற்றி பத்தானிடம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x