Published : 13 Oct 2018 05:01 PM
Last Updated : 13 Oct 2018 05:01 PM

‘ஊதிப்பெருக்கப்பட்ட கே.எல்.ராகுலின் திறமை’: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் காலைநீட்டிப் போட்டு எல்.பி.ஆகி குறைந்த ரன்களில் வெளியேறிய தொடக்க வீரர் ராகுல், 2வது டெஸ்ட் போட்டியில் பதற்றமாக ஆடி காலை நகர்த்தாமல் பந்தின் மீது மட்டையைத் தொங்க விட்டு பிளேய்ட் ஆன் ஆகி ஹோல்டர் பந்தில் 4 ரன்களில் வெளியேறினார்.

மேலும் இந்த பேட்டிங் பிட்சில் கூட அவர் 25 பந்துகளில் 4 ரன்கள்தான் எடுத்தார், எதிர்முனையில் பிரித்வி ஷா ஒரு மினி சேவாக் போல் பட்டாசு வெடிக்க ராகுல் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து ராகுல் பேட்டிங் ஊதிப்பெருக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் தங்கள் ஆத்திரத்தையும் கேலியையும் ட்விட்டரில் கொட்டி வருகின்றனர்.

மோஹன் குட்டா: கடவுள் ராகுலை நமக்கு அளித்தால் அவரை ராகுல் திராவிட் ஆக்குங்கள், கேஎல்.ராகுலாக வேண்டாம்.

ஷஷி நாயக்: கே.எல்.ராகுல் பேட்டிங் உத்தியில் சில பிரச்சினைகள் உள்ளன, சஞ்சய் பாங்கர் என்ன செய்கிறார்?

அபர்ணா: விராட் கோலியும் அணி நிர்வாகமும் ராகுலை நம்புவது போல் என் வாழ்க்கையிலும் எனக்கு யாராவது இருந்தால் நல்லது.

விநோத் பாஸ்னியூர்: கேஎல்.ராகுல் கிரிக்கெட்டின் அடுத்த பெரிய நிகழ்வா? யார் சொன்னது, சிறுபிள்ளைத்தனமான பேச்சு.

இன்னொரு வாசகர் கே.எல்.ராகுல் 10 போட்டிகளில் ஆடி 387 ரன்கள், சராசரி 22.76 என்று பதிவிட்டு ‘அவருக்கு நம்ப முடியாத ஆதரவு எப்படி?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x