Published : 03 Oct 2018 04:09 PM
Last Updated : 03 Oct 2018 04:09 PM

ஹாங்காங் அணியில் நீடிக்க முடியாது: பைலட் கனவுக்காக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற 21 வயது வீரர்

விமான பைலட்டாக வர வேண்டும் என்பதற்காகச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 21 வயதில் ஹாங்காங்அணி வீரர் கிறிஸ் கார்ட்டர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஹாங்காங் அணி வீரர் கிறிஸ் கார்ட்டர். 18வயதாக இருக்கும்போது ஹாங்காங் அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை 11 சர்வதேச ஒருநாள்போட்டிகளிலும், 13 டி20 போட்டிகளிலும் கார்ட்டர் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 114 ரன்களும், டி20 போட்டியில் 55 ரன்கள் சேர்த்துள்ளார்.

ஆசியக் கோப்பை தகுதிச்சுற்றுப்போட்டியின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான இறுதிஆட்டத்தில் 33 ரன்கள் சேர்த்து ஹாங்காங் அணியை ஆசியக்கோப்பைக்கு தகுதிபெறச் செய்ய கார்டர்முக்கியக்காரணமாக அமைந்தார்.

ஆசியக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஹாங்காங் அணி முதல் ஆட்டத்தில் இந்திய அணிக்குச் சவாலாகஅமைந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 285 ரன்கள் குவித்தது. அடுத்ததாகக்களமிறங்கிய ஹாங்காங் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அன்சுமன் ராத், நிஜாகத் கான் முதல்விக்கெட்டுக்கு 174 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்குப் பிரமிப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால், அந்தப்போட்டியில் இந்திய வீரர்களின் அனுபவமான பந்துவீச்சால் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஹாங்காங் அணி சிறப்பாக விளையாடிய போதிலும் தோல்விஅடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த அணியின் வலதுகை பேட்ஸ்மேனும் இளம் வீரரான கிறிஸ் கார்டர் கனவு என்பது கிரிக்கெட் வீரராகவேண்டும் என்பதைக் காட்டிலும் விமான பைலட்டாக வேண்டும் என்பதுதான். ஆதலால், ஆசியக்கோப்பைப் போட்டி முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்துவிட்டு, ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் 55 வார பைலட் பயிற்சிக்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து கிறிஸ்கார்டர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஹாங்காங் அணியில் இடம் பெற வேண்டும்என்பதற்காகவே நான் எனது படிப்பை பாதியில் நிறுத்தினேன். ஆனால், என்னுடைய நீண்டநாள் கனவைநிறைவேற்றிக்கொள்ள இதுதான் சரியான தருணம் என நினைக்கிறேன். என்னுடைய கனவான விமானபைலட்டை நோக்கி நான் நகர்கிறேன். மிகவும் நிதிநெருக்கடியில் இருக்கும் ஹாங்காங் அணியில்தொடர்ந்து கிரிக்கெட் வீரராக இருப்பது மிகவும் கடினம். ஆதலால், நான் எனது கனவை நோக்கிநகர்கிறேன் எனத் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளேட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கிறிஸ்கார்டர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்ததால், அந்நாட்டுகுடியுரிமை பெற்றார். இப்போது பைலட் பயிற்சிக்காக பெர்த் நகரம் சென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x