Published : 14 Oct 2018 07:14 PM
Last Updated : 14 Oct 2018 07:14 PM

எழும்பாத பந்துக்கு குனிந்து சச்சின் போலவே எல்.பி.யை எதிர்கொண்ட பிரித்வி ஷா: தப்பிய அதிர்ஷ்டம்

ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று 72 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 75/0 என்று அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

வெற்றிக்கான ரன்களை பவுண்டரி அடித்து சாதித்தார் பிரித்வி ஷா.

இந்த 2வது இன்னிங்சில் ஒரு சம்பவம் ஏற்கெனவே சச்சினுடன் தாறுமாறக அதற்குள் ஒப்பிடப்படும் பிரித்விஷாவுக்கு சச்சினுக்கு மெக்ரா பந்தில் நிகழ்ந்தது போன்ற சம்பவமும் நிகழ்ந்தது.

ஹோல்டர் வீசிய இன்னிங்சின் 5வது ஓவரில் ஹோல்டரின் ஷார்ட் பிட்ச் பந்து ஒன்று எதிர்பார்த்த அளவு எழும்பவில்லை, ஆனால் எழும்பும் என்று நினைத்து பிரித்வி ஷா குனிந்தார். ஆனால் பந்து உயரம் குறைந்து குனிந்த பிரித்வி ஷா-வின் கையில் பட்டது.

ஹோல்டர், மே.இ.தீவுகள் வீரர்கள் முறையீடு செய்தனர். ஆனால் அது ஸ்டம்பை மிஸ் செய்யும் என்று களநடுவர் அவுட் கொடுக்கவில்லை.

மே.இ.தீவுகள் ரிவியூ செய்தனர், அதில் ஸ்டம்பில் பந்து அடிக்கும் என்றுதான் தெரிந்தது. ஆனால் கள அம்பயர் தீர்ப்பு என்று வந்து விட்டதால் பிரித்வி ஷா தப்பினார், ஆனால் அது அவுட். இது சச்சின் ஒரு முறை மெக்ரா பந்தில் எல்.பி.ஆனதை அப்படியே அச்சாக ரசிகர்களுக்கு நினைவூட்டியிருக்கலாம்.

ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பரபரப்பான கட்டத்தில் இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த போது சச்சின் டெண்டுல்கருக்கு மெக்ரா இத்தகைய குட்டை பவுன்சரை வீச சச்சின் குனிந்தார் பந்து சச்சினின் கையில் பட்டது. பலத்த முறையீட்டில் நடுவர் அவுட் கொடுத்தார். சச்சின் எல்.பி.ஆனார். அது பெரிய சர்ச்சையானது. அது போல் இப்போது பிரித்வி ஷாவுக்கும் நடந்துள்ளது. ஆனால் ஷா நாட் அவுட். சச்சினையும், ஷா-வையும் ஒப்பிடுபவர்கள் வாயை மெல்ல இன்னொரு சம்பவமாக இது அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x