Published : 16 Aug 2018 08:56 AM
Last Updated : 16 Aug 2018 08:56 AM

லார்ட்ஸ் கிரிக்கெட் டெஸ்டில் படுதோல்வி: இந்திய அணி மீது கம்பீர் கடும் தாக்கு

லார்ட்ஸில் நடைபெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி கண்டதற்கு முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை வென்ற அணி இந்திய அணி, ஒரு நாள் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கியது. எட்ஜ் பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டை இழந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை இந்தியா சந்தித்தது.

இதையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் தோல்வி தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா டெஸ்ட் போட்டியை விளையாடிய விதம் அனைவரையும் ஏமாற்றியது. இங்கிலாந்து அணியின் பந்துவீச் சில் இந்திய வீரர்கள் எளிதாக வீழ்ந் தனர். அவர்களிடம் போராட்டக் குணமே இல்லாமல் போய்விட்டது.

இங்கிலாந்து பந்துவீச்சை சிறிது கூட எதிர்க்காமல் அனைத்து வீரர்களும் சரணடைந்துவிட்டனர். இந்த டெஸ்ட் போட்டி வெறும் 3 நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு இந்திய அணி மோசமாக விளையாடியது.

2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியினர், இங்கிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து டெஸ்ட் போட்டியை கடைசி நாள் வரை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் இந்திய அணி யின் செயல்பாடு அதிருப்தியளிக் கிறது. இந்தத் தொடரில் இந்தியா மீண்டெழுந்து வரவேண்டும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலை யில் அது நடக்காது என்றே தெரிகிறது. அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா வெல்வது கடினமான விஷயம்.

இருந்தபோதும், இந்திய அணி யினர் இனிமேலாவது போராட்டக் குணத்துடன் விளையாடி தொடரை டிரா செய்ய முயல வேண்டும். அதற் கான முயற்சிகளில் அணி நிர்வாகம் இறங்க வேண்டும். கேப்டன் விராட் கோலி, அணி வீரர்களை ஒருங்கிணைத்து வெற்றிகளைக் காண முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x