Published : 16 Aug 2014 12:00 AM
Last Updated : 16 Aug 2014 12:00 AM

ஆக.20-ல் மாநில செஸ்

அன்னபிரகதா டிராபிக்கான 16-வது மாநில அளவிலான 25 வயதுக்குட்பட்டோருக்கான ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் மற்றும் நிவார்த்தி டிராபிக்கான 13-வது மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.20,400 ஆகும். தமிழ்நாடு செஸ் சங்கத்தில் பதிவு (2014-15) செய்த 1.1.1989 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள். இந்தப் போட்டிக்கு முன்பதிவு செய்ய வரும் 18-ம் தேதி கடைசி நாளாகும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், 75, ஜவாஹர்லால் நேரு மைதானம், பெரியமேடு, சென்னை-600003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதேபோல் 044-25384477 என்ற எண்ணிலும், tnchesstmt@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மாநில செஸ் சங்க பொதுச்செயலர் வி.ஹரிஹரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x