Published : 02 Jul 2018 08:56 AM
Last Updated : 02 Jul 2018 08:56 AM

விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடக்கம்

பாரம்பரியமிக்க வெள்ளை நிற உடையில் விளையாடப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இன்று லண்டனில் தொடங்குகிறது.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடங்குகிறது. வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் பாரம்பரியமிக்க இந்தத் தொடரின் முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் முக்கிய ஆட்டங்களில் முதல் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், செர்பியாவின் டுசான் லஜோவிக்குடன் மோதுகிறார்.

மற்ற ஆட்டங்களில் 6-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்காவுடனும், 13-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச், இங்கிலாந்தின் லயிம் பிராடியையும், 3-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், ஜப்பானின் நிஷிகோவாவையும், 11-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சேம் குயரே, ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனையும், 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ஜெர்மனியின் யானிக் மடெனையும், 8-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், சுலோவேக்கியாவின் நார்பர்ட் கோம்பாஸையும் சந்திக்கின்றனர்.

மகளிர் பிரிவில் 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, அமெரிக்காவின் லெப்சென்கோவுடன் மோதுகிறார்.

4-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், குரோஷியாவின் டோனா வெகிக்கையும், 25-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நெதர்லாந்தின் அரான்ட்சா ரஸையும், 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், சுவீடனின் ஜோகன்னா லார்சனையும், 5-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, ஜெர்மனியின் தட்ஜானா மரியாவையும், 7-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, இங்கிலாந்தின் ஹாரிட் டார்ட்டையும், 13-ம் நிலை வீராங்கனையான ஜூலியா ஜார்ஜஸ், புயிர்டோ ரிகோவின் மோனிகா புயிக்கையும் எதிர்கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x