Published : 23 Jul 2018 12:45 PM
Last Updated : 23 Jul 2018 12:45 PM

சர்வதேச போட்டிகளில் இருந்து இலங்கை பேட்ஸ்மேன் திடீர் ‘சஸ்பெண்ட்’ - இலங்கை கிரிக்கெட் வாரியம்அதிரடி

விளையாட்டு வீரரின் ஒழுக்கவிதிமுறைகளை மீறி நடந்ததாகக் கூற இலங்கை அணியின் முக்கியபேட்ஸ்மேன் தனுசுகா குணதிலகாவை அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட்செய்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான –2-வது டெஸ்ட் போட்டியில் குணதிலகா விளையாடிவரும் நிலையில்இந்த அதிரடி உத்தரவை இலங்கை வாரியம் பிறப்பித்துள்ளது. இந்த சஸ்பெண்ட் உத்தரவு டெஸ்ட் போட்டிமுடிந்ததும் அமலுக்கு வருவதாக அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வீரரின் ஒழுக்க நடவடிக்கை தொடர்பான விசாரணை நிலுவகையில் இருப்பதால், இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, வீரரின்ஒழுக்க நடவடிக்கை தொடர்பாக வீரர் குணதிலகாவிடம் விசாரணை நடத்தப்பட இருப்பதால், அவர்அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வரும். அவரின்ஆண்டு ஒப்பந்த ஊதியத்தில் இருந்தும் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விதமான ஒழுக்க விதிமுறைகளை மீறினார் , என்ன தவறு செய்தார் என்பது குறித்த விவரங்களைஇலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. கடந்தவாரம், இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்வாண்டர்சே ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேற்கிந்தியத்தீவுகளில் விளையாடச்சென்றபோது, குறிப்பிட்ட நேரத்துக்குள் ஹோட்டலுக்கு திரும்பாததால், அவர் மீது இலங்கை வாரியம்நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் குணதிலகாவைப் பொருத்தவரை அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி வந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 முத்தரப்பு தொடரில், வங்கதேச பேட்ஸ்மேன் தமிம் இக்பாலை சென்ட்-ஆப்செய்யும் வகையில் செய்கை செய்ததாக சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து குணதிலகா மீது ஐசிசிவிதிமுறைப்படி ஒரு மைனஸ் புள்ளி தரப்பட்டது

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் போது, ஒழுக்கக்குறைவாக நடந்ததால், 6 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டார். இந்தியாவுக்குஎதிரான உள்நாட்டில் நடந்த அனைத்துத் தொடர்களிலும் பயிற்சியில் பங்கேற்காமல் குணதிலகாபுறக்கணித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக 3 போட்டிகளில் விளையாடத்தடைவிதிக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x