Published : 01 Jul 2018 09:47 AM
Last Updated : 01 Jul 2018 09:47 AM

குரோஷியாவை சமாளிக்குமா டென்மார்க்?

நிஷ்னிநோவோகிராட்

உலகக் கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு குரோஷியா, டென்மார்க் அணிகள் மோதவுள்ளன.

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கரோட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குரூப் டி பிரிவில் இடம்பெற்ற குரோஷியா அணியானது அபார மாக விளையாடியது. தான் விளை யாடிய 3 ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி கண்டது. மொத்தம் 9 புள்ளிகளுடன் அந்த அணி முதலிடத்தைப் பிடித்திருந்தது.  7 கோல்களைப் போட்ட அந்த அணி, ஒரே ஒரு கோலை மட்டுமே வாங்கியிருந்தது.

பலம் வாய்ந்த அர்ஜென்டினா, நைஜீரியா அணிகளையும், ஐஸ்லாந்து அணியையும் குரோஷியா லீக் ஆட்டங்களில் அபாரமாக சாய்த்திருந்தது.

குறிப்பாக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அர்ஜென்டினா அணியை 3-0 என்ற கணக்கில் குரோஷியா அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தை ரசிகர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.

அதே நேரத்தில் டென்மார்க் அணியானது குரூப் சி பிரிவில் 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 டிராக்களுடன் நாக்-அவுட் சுற்றில் நுழைந்தது. முதல் சுற்றில் டென்மார்க் அணி 5 புள்ளிகளை மட்டுமே பெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. லீக் ஆட்டங்களில் அந்த அணி 2 கோல்களை மட்டுமே அடித்திருந்தது. மாறாக ஒரு கோலை மட்டுமே அந்த அணி வாங்கியிருந்தது.

இந்த நிலையில் பலம் கொண்ட இரு அணிகளாக நாக்-அவுட் சுற்றில் குரோஷியாவும், டென்மார்க்கும் மோதவுள்ளன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்றாலும் டென்மார்க்கை விட குரோஷியா ஒரு படி மேலேயிருக்கிறது. எனவே அந்த அணியைச் சமாளிப்பது டென்மார்க் அணிக்கு கடினமானசவாலாக இருக்கும்.

குரோஷியா அணியின் கேப்ட னான லூகா மோட்ரிக், நட்சத்திர வீரர் இவான் ராகிடிக் பலம் வாய்ந்த வீரர்களாக எதிரணியை களத்தில் மிரட்டுபவர்களாக உள்ளனர். ஸ்பெயின் வீரர் ஆந்த்ரே இனியெஸ்டாவுடன் பார்சிலோனா கால்பந்து கிளப்புக்காக நீண்ட காலம் விளையாடிய அனுபவம் உள்ளவர் லூகா மோட்ரிக்.

கிளப் போட்டிகளுக்காக லூகா மோட்ரிக் விளையாடிய அனுபவம் இந்த நாக்-அவுட் சுற்றில் குரோஷி யாவின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல் மாட்ரிக் அணிக்காக 4 முறை கோப்பையைப் பெற்றுத் தந்தவர் மோட்ரிக். மேலும் லாலிகா, கோபா டெல் ரே கோப்பையையும் கைப்பற்றித் தந்தவர்தான் மோட்ரிக்.

அதேபோல மோட்ரிக்குக்கு நிகரான அனுபவம் வாய்ந்தவர் ராகிடிக். அவரது திறமையும் இந்த நாக்-அவுட் சுற்றில் பளிச் சிடக்கூடும். அதே நேரத்தில் டென்மார்க் அணியானது மிட்பீல்டர் கிறிஸ் டியன் எரிக்ஸனை நம்பி களம் காண்கிறது. களத்தில் அவரது புயல்வேக பாஸ்கள் எதிரணிக்கு நிச்சயம் அச்சுறுத்தலைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடை யாது.

இதுகுறித்து எரிக்சன் கூறும் போது, “மோட்ரிக் சிறந்த வீரர்தான். அவரைக் கையாள எங்களுக்குத் தெரியும். அவரை விட மோசமான வீரர் நான் இல்லை. ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் விளையாடும்போது நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர். கிளப்புக்காக ஆடும் போதே அவர் சிறப்பாக ஆடுவார். தற்போது அவர் நாட்டுக்காக விளையாடும்போது அவரது ஆட்டத்தில் அனல் பறக்கும்.

எங்கள் அணி வீரர்களும் நாக்-அவுட் போட்டிக்காகத் தயாராகி வருகின்றனர். பலத்தில் நாங்கள் ஒன்றும் குரோஷியாவுக்கு சளைத் தவர்கள் அல்ல” என்றார்.

இதுவரை சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் குரோஷியா, டென்மார்க் அணிகள் 2 முறை மோதியுள்ளன. இதில் குரோஷியா ஒருமுறையும், டென்மார்க் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1999-ல் நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க் 1-0 என்ற கணக்கில் குரோஷியாவை வென்றிருந்தது. 2004-ல் நடைபெற்ற ஆட்டத்தில் குரோஷியா 2-0 என டென் மார்க்கைத் தோற்கடித்துள்ளது.

இதுவரை 2 அணிகளுமே உல கக் கோப்பையை வென்றதில்லை. 1998-ல் குரோஷியா 3-வது இடத்தைப் பிடித்ததே உலகக் கோப்பையில் அதன் அதிகபட்ச வெற்றியாகும். அதேபோல டென்மார்க் அணியானது 1998-ல் கால் இறுதி வரை முன்னேறியிருந்தது அதிகபட்ச வெற்றியாகும். கால் இறுதியில் 1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸிடம் தோல்வி கண்டு வெளியேறியது டென்மார்க்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x