Published : 25 Jul 2018 08:15 AM
Last Updated : 25 Jul 2018 08:15 AM

எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை 3 நாட்களாக குறைத்தது இந்திய அணி நிர்வாகம்: ஆடுகளம், அவுட்பீல்டில் கடும் அதிருப்தி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கி லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற குறுகிய வடிவிலான தொடர்களில் டி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் இரு அணிகளும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் வரும் 1-ம் தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இந்தத் டெஸ்ட் தொடருக்கு தயாரா கும் விதமாக எசக்ஸ் அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று விளையாட திட்டமிட்டிருந்தது.

இந்த ஆட்டம் செல்ம்ஸ்ஃபோர் டில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட் டது. இதற்கிடையே நேற்று இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டி ருந்த இரு வலைகளில் சுமார் 4 மணி நேரம் இந்திய அணியினர் இரு பிரிவுகளாக பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பயிற்சி ஆட்டத்துக்கான ஆடுகளத்தை பார்வையிட்ட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடும் அதிருப் தியடைந்தார். ஆடுகளத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் புற்கள் இருப்பதாக இந்திய அணி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆடுகளத் தில் இருந்த புற்கள் கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டது. மேலும் அவுட் பீல்டில் புற்களே இல்லாமல் கடினமான தரையாக இருப்பதும் தெரியவந்தது. இது போன்ற அவுட் பீல்டில் வீரர்கள் பீல்டிங் செய்யும் போது காயம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதற்கும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேர யோசனைக்குப் பிறகு பயிற்சி ஆட்டத்தை 3 நாட்களாக குறைக்க இந்திய அணி முடிவு செய்தது. இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டது.

இதன்படி 3 நாட்களில் பயிற்சி ஆட்டத்தை முடித்துக் கொண்டு ஏற்கெனவே திட்டமிட்டதைவிட ஒருநாளுக்கு முன்பாகவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் பர்மிங்காம் நகருக்கு செல்ல இந்திய அணி திட்டமிட்டுள்ளது.

3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டமானது இந்திய அணியின் பலத்தை சோதனை செய்து கொள்ளவும், முதல் டெஸ்ட் போட்டிக்கான சரியான அணித் தேர்வை அமைக்கவும் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் திரும்பி உள்ள நிலையில் அணியின் பேட்டிங் செட்டிலானதாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் இந்திய அணி நிர் வாகம் பிரதான பணியாக வேகப் பந்து வீச்சு துறையில் அதிக கவ னம் செலுத்தக்கூடும். புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் விளையாடாத நிலையில் முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோரை நம்பியே இந்திய அணி களமிறங்குகிறது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சு தாக்குதலுக்கான பொறுப்பை நீண்ட காலமாக தங்களது தோள்களில் சுமந்து வந்துள்ளனர்.

ஆனால் தற்போது சைனாமேன் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட் டுள்ளார். பயிற்சி ஆட்டம் என் பதால் அணியில் உள்ள 18 வீரர் களையும் மாற்றி மாற்றி களமிறக் கிக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால் அனைத்து வீரர்களையும் திறனையும் இந்திய அணி நிர்வாகம் பரிசோதித் துக்கொள்ள முயற்சிக்கக் கூடும்.

இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x