Published : 04 Jun 2018 03:31 PM
Last Updated : 04 Jun 2018 03:31 PM

மீண்டும் ரக்பி விளையாடச் சென்ற அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரக்பி ஆட்டத்துக்குச் சென்றார் நியூஸிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பிரெண்டன் மெக்கல்லம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டின் அதிவேக சதத்தை எடுத்த பிரெண்டன் மெக்கல்லம்மின் அருமையான கிரிக்கெட் கரியருக்குப் பிறகு தற்போது அவர் மீண்டும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரக்பி விளையாடினார்.

இது குறித்து பிரெண்டன் மெக்கல்லம் தன் ட்விட்டரில் “18 ஆண்டுகளுக்குப் பிறகு ரக்பி. United Matamata பி அணிக்காக விளையாடினேன். மிகவும் பிடித்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி அடைந்தோம். ஆனால் சக வீரர்களுடன் நல்ல கேளிக்கை” என்று பதிவிட்டுள்ளார்.

மெக்கல்லம் படித்த காலத்தில் கிங்ஸ் ஹைஸ்கூலுக்காக ரக்பி ஆடிய மெக்கல்லம். ஞாயிறன்று தன் 36 வயதில் United Matamata அணிக்காக ஃபுல் பேக் நிலையில் ஆடியுள்ளார் மெக்கல்லம்.

முதல் தடுப்பாளரை வெற்றிகரமாக முறியடிக்க வேண்டும், கொஞ்சம் தாமதம்தான் ஆனால் மோசமான ஆட்டமாக இல்லை என்று மெக்கல்லம் தன் ஆட்டம் பற்றி குறிப்பிட்டார்.

மெக்கல்லம் முன்பு ரக்பி ஆடிய போது பிற்பாடு ஆல் பிளாக்ஸ் ஸ்டார் ஆக உருவான நட்சத்திர வீரர் டேன் கார்ட்டர் என்ற வீரரை சவுத் ஐலண்ட் செகண்டரி ஸ்கூல் ரக்பி அணியில் சேர்க்காமல் பிரெண்டன் மெக்கல்லத்தைச் சேர்த்தனர். அந்த அளவுக்கு பிரெண்டன் மெக்கல்லம் கால்பந்தாட்டத்தில் சிறப்பாகத் திகழந்ததாக நியூஸிலாந்து ஊடகங்கள் விதந்தோதியுள்ளன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x