Published : 28 Jun 2018 05:31 PM
Last Updated : 28 Jun 2018 05:31 PM

‘சேவாக் கதையை முடித்ததுபோல், என்னையும் முடித்துவிடாதீர்கள், தோனியுடன் மோதல் இல்லை’: அஸ்வின் பதற்றம்

சேவாக் கதையை முடித்தது போல் என் கதையையும் முடித்துவிடாதீர்கள், எம்எஸ் தோனியுடன் எனக்கு எந்தவிதமான மோதலும் இல்லை என்று ரவிச்சந்திர அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இருந்து சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா கழற்றிவிடப்பட்டு இளம் வீரர்கள்  சாஹல், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே இனிமே அஸ்வின் வாய்ப்பு பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

தமிழ்நாடு ப்ரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் புதுஜெர்சி அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் அந்த அணியின் கேப்டன் அஸ்வின் பங்கேற்றார். அப்போது நிருபரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவரிடம் இந்திய அணிக்கு தேர்வாகாதது குறித்து நிருபர்கள் கேட்டனர். அப்போது அஸ்வின் கூறியதாவது:

நான் அணிக்குத் தேர்வாவதும், பெஞ்சில் அமரவைக்கப்படுவதும் என்னுடைய கிரிக்கெட்டை அணிநிர்வாகம், தேர்வாளர்களைப் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொருத்து அமையும். இது முழுமையாக என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. மற்றொரு கிரிக்கெட் வீரரைப் போல் எனக்கும் இந்திய அணியின் உடையை அணிந்து விளையாட விருப்பம் தான்.

இப்போதுள்ள எனது கிரிக்கெட் வாழ்க்கையில், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் கவனம் செலுத்தி கிரிக்கெட் அனுபவித்து விளையாடி வருகிறேன். நல்ல வாய்ப்பு கிடைத்தால், அதை இரு கைகளாலும் தாங்கிப்படித்துப் பயன்படுத்திக் கொள்வேன் எனத் தெரிவித்தார்.

ஆப்-ஸ்பின்னரான நீங்கள், லெக் ஸ்பின் வீச திடீர் காரணம் என்ன என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்குஅஸ்வின் பதில் அளிக்கையில், எனக்கு எந்தவிதத்திலும் சோதனை முயற்சி இல்லை. என்ன நான் செய்தாலும்அதற்கு பின் ஒரு தர்க்கம் இருக்கும். ஐபிஎல் போட்டியில் நான் லெக் ஸ்பின், ஆப்-ஸ்பின் இரண்டும் வீசி இருக்கிறேன். லட்சக்கணக்கான பந்துகள் பயிற்சி எடுக்கிறேன்.

நாளை போட்டி எப்படி இருக்குமோ எனக்குத் தெரியாது. டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஒருவராக டெஸ்ட் போட்டி குறித்த முக்கியத்துவத்தை அறிய வேண்டும். நான் லெக் ஸ்பின் அல்லது கூக்ளி பந்துவீச்சு வீச முயன்றாலும் அது ஆப்கானிஸ்தான் போட்டியில் செய்திருக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் பந்துவீச்சாளர்கள் குறித்து அஸ்வின் கூறுகையில், 50 ஓவர்கள், டி20 போட்டிகளில் இங்கிலாந்து அணி வலிமையானது. 2015-ம் ஆண்டுக்குப் பின் இங்கிலாந்து வலிமையாக மாறி வருகிறது. ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர்குமார், பும்ராவின் பந்துவீச்சில்  டெத் ஓவர்கள் முக்கிய பங்காற்றும்.

இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்துவீச்சு முக்கியப் பங்காற்றும், தென் ஆப்பிரிக்காவில் நமது வேகப்பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதேபோன்று இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். அதிலும் சுழல்பந்துவீச்சு முக்கியப்பங்காற்றும் என்று தெரிவித்தார்.

ஐபில் போட்டியில் இருந்து உங்களுக்கும், தோனிக்கும் மோதல் இருப்பதாகக் கூறப்படுகிறது அது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அஸ்வின் கூறுகையில், சார், ஏற்கனவே தோனிக்கும், சேவாக்குக்கும் மோதல் இருப்பதாகக் கூறி சேவாக் கதையை முடித்துவிட்டது போல் என் கதையையம முடித்துவிடாதீர்கள். தோனியுடன் எனக்கு எந்தவிதமான பனிப்போரும், மோதலும் இல்லை. அனைத்து வீரர்களுடன் சகஜமாக பழகும் விதத்திலேயே தோனியுடன் பழகுகிறேன். எனக்கும் தோனிக்கும் எந்தவிதமான போட்டியும் இல்லை

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x