Published : 15 May 2018 07:33 AM
Last Updated : 15 May 2018 07:33 AM

முதலிடத்தை இழந்தார் நடால்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஸ்பெயினின் ரபேல் நடால் முதலிடத்தை இழந்தார்.

மாட்ரிட் ஓபன் தொடர் முடிவடைந்த நிலையில் சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரபேல் நடால் முதலிடத்தை இழந்துள்ளார். மாட்ரின் ஓபனில் கால் இறுதி சுற்றுடன் நடால் வெளியேறிதால்2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 12-வது இடத்தில் இருந்து 18-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், மாட்ரிட் ஓபனில் 2-வது சுற்றுடன் வெளியேறியிருந்தார். தரவரிசையில் 2006-ம் ஆண்டுக்கு பிறகு ஜோகோவிச் தற்போதுதான் கடும் சரிவை சந்தித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x