Published : 13 May 2018 09:51 AM
Last Updated : 13 May 2018 09:51 AM

செய்தித்துளிகள்: டி 20 கண்காட்சி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதியில் நம்பர் ஒன் வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் 5-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் டொமினிக் தியமிடம் தோல்வியடைந்தார்.

அயர்லாந்து அணி தனது அறிமுக கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தேநீர் இடைவேளையின் போது 59 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 4, இமாம் உல்-ஹக் 7, ஹரிஸ் சோகைல் 31, ஆசாத் ஷபிக் 62, பாபர் அசாம் 14, கேப்டன் சர்ப்ராஸ் அகமது 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷதப் கான் 25, பஹீம் அஸ்ரப் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். அயர்லாந்து தரப்பில் முர்டாஹ், ரேங்கின், தாம்ப்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தனர்.

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் கொரியாவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதுகிறது.

ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றையொட்டி மகளிருக்கான டி 20 கண்காட்சி போட்டி வரும் 22-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மொத்தம் 20 இந்திய வீராங்கனைகள், 10 வெளிநாட்டு வீராங்கனைகள் ஐபிஎல் லெவன் - பிசிசிஐ லெவன் ஆகிய இரு அணிகளாக மோத உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x