நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்

நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்
Updated on
1 min read

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா 3-வது இடம் பிடித்தார். இந்தத் தொடரில் நார்வே வீரரும், உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு இறுதிச் சுற்றில் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க வீரர் பேபியானோ கருணாவை வென்றார். தொடரின் முடிவில் 17.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இறுதிச் சுற்றில் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவை வென்றார். இதன்மூலம் மொத்தம் 14.5 புள்ளிகள் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம் கிடைத்தது. ஹிகாரு நகமுரா 2-வது இடம் பிடித்தார்.

இதேபோல், மகளிர் பிரிவில் சீன வீராங்கனை வென்ஜுன் ஜு முதலிடம் பிடித்தார். இந்திய வீராங்கனைகள் ஆர். வைஷாலி 4-வது இடமும், கொனேரு ஹம்பி 5-வது இடமும் பிடித்தனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in