பஞ்சாப் அசத்தல் பவுலிங்: ராஜஸ்தான் அணி 144 ரன்கள் சேர்ப்பு @ ஐபிஎல்

பஞ்சாப் அசத்தல் பவுலிங்: ராஜஸ்தான் அணி 144 ரன்கள் சேர்ப்பு @ ஐபிஎல்
Updated on
1 min read

கவுகாத்தி: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 144 ரன்கள் எடுத்துள்ளது.

கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஓப்பனிங் இறங்கிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் ஒரு பவுண்டரியோடு நடையைக்கட்டி அதிர்ச்சி கொடுத்தார். ஜாஸ் பட்லர் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக இறங்கிய டாம் கோஹ்லர்-காட்மோர் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார். 23 பந்துகளில் 18 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட்டானார். கேப்டன் சஞ்சு சாம்சன் அதே 18 ரன்களோடு முடித்துக்கொண்டார்.

இதன்பின் வந்தவர்களில் ராஜஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளித்த வீரர்களாக ரியான் பராக்கும் அஸ்வினும்தான். ரியான் பராக் பொறுமையாக விளையாடினார். அஸ்வின் தன் பங்குக்கு 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். 48 ரன்கள் எடுத்திருந்த ரியான் பராக் கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் சாம் கர்ரன், ராகுல் சஹார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in