Published : 22 Apr 2024 09:30 PM
Last Updated : 22 Apr 2024 09:30 PM

சந்தீப் சர்மா பந்துவீச்சில் சரிந்த மும்பை விக்கெட்டுகள்: ராஜஸ்தானுக்கு 180 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

நேஹால் வதேரா

ஜெய்ப்பூர்: ஐபிஎல் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்களை சேர்த்துள்ளது. சந்தீப் சர்மா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இஷான் கிஷன் - ரோகித் சர்மா இணை ஓப்பனர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரில் 5 ரன்களுக்கு விக்கெட்டானார் ரோகித். அடுத்த ஓவரில் இஷான் கிஷன் டக்அவுட். 4ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் கிளம்பினார். அடுத்து வந்த நபியும் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை 72 ரன்களைச் சேர்த்தது.

திலக் வர்மாவும், நேஹல் வதேராவும் கைகோத்து அணியின் ஸ்கோரை ஏற்றினர். நேஹல் வதேரா 4 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டி மிரட்டினாலும், 49 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் திலக் வர்மா நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார்.

ஹர்திக் பாண்டியா 10 ரன்களிலும், திலக் வர்மா 65 ரன்களிலும், ஜெரால்டு கோட்ஸி ரன் எதுவும் எடுக்காமலும், டிம் டேவிட் 3 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை 179 ரன்களைச் சேர்த்தது.

ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டையும், அவேஷ் கான், யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x