Published : 20 Feb 2018 09:00 AM
Last Updated : 20 Feb 2018 09:00 AM

தரவரிசையில் யுகி பாம்ப்ரி முன்னேற்றம்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி 11 இடங்கள் முன்னேறி 101-வது இடத்தை பிடித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஏடிபி சாலஞ்சர் போட்டியில் யுகி பாம்ப்ரி இறுதி சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்ததால் தற்போது தரவரிசையில் அதற்குரிய பலனை பெற்றுள்ளார். மற்ற இந்திய வீரர்களான ராம்குமார் ராமநாதன் 140-வது இடத்திலும், சுமித் நாகல் 216-வது இடத்திலும், குணேஷ்வரன் 242-வது இடத்திலும் உள்ளனர். இவர்களில் ராம்குமார், சுமித் நாகல் ஆகியோர் தலா ஒரு இடம் முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் குணேஷ்வரன் ஒரு இடம் பின் தங்கினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா 20-வது இடத்தையும், திவிஜ் சரண் 42-வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். அதேவேளையில் லியாண்டர் பயஸ் இரு இடங்களை இழந்து 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து விளையாடும் பூரவ் ராஜா 57-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா இரு இடங்களை இழந்து 255 இடத்திலும், கர்மான் கவுர் தாண்டி 3 இடங்களை இழந்து 281-வது இடத்திலும் உள்ளனர். காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வரும் சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் 14-வது இடத்தில் நீடிக்கிறார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x