Last Updated : 05 Feb, 2018 04:44 PM

 

Published : 05 Feb 2018 04:44 PM
Last Updated : 05 Feb 2018 04:44 PM

காரசாரமில்லாமல் மாறுகிறதா ஒருநாள், டி20 தொடர்?தெ.ஆப்பிரிக்க அணியில் இருந்து டி காக் விலகல்

 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டீகாக் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஏற்கனவே டிவில்லியர்ஸ், டூபிளசிஸ் இல்லாத நிலையில், தடுமாறிவரும் தென் ஆப்பிரிக்கா அணி டிகாக்கும் இல்லாமல் இருக்கும்போது, அடுத்துவரும் 3-வது ஒருநாள் போட்டி சுவரஸ்யமில்லாமல் சென்றுவிடும் எனத் தெரிகிறது.

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது.

6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த இருபோட்டிகளிலும் வென்று 2-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

ஏற்கனவே காயம் காரணமாக முதல் 3 போட்டிகளுக்கு விளையாடாமல், முக்கிய வீரர் டீவில்லியர்ஸ் ஓய்வில் இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, கேப்டன் டூப்பிளசிஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து விலகினார்.

இதன் காரணமாக, 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முழுபலத்துடன் இல்லாமலும், அனுபவ வீரர்கள் இல்லாமலும் 118 ரன்களுக்கு சுருண்டது.

இந்நிலையில், அடுத்த பின்னடைவாக, விக்கெட் கீப்பர், பேட்ஸ்மனான குவின்டன் டி காக் கை மணிக்கட்டு காயம் காரணமாக ஒருநாள், டி20 தொடரில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

2-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றபோது, குவின்டன் டி காக்குக்கு இந்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவருக்கு மருத்துவ சிக்சை அளிக்கப்பட்டதில், அவர் 2 முதல் 4 வாரங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் கீப்பரையும், முக்கிய அதிரடி பேட்ஸ்மனையும் இழந்துள்ளது.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றுவிக்கெட் கீப்பர் இல்லாத நிலையில், ஹெயின்ரிச் கிளாசன் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு கிளாசன் சேர்க்கப்பட்டால், 3-வது ஒருநாள் போட்டி அவருக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாக இருக்கும்.

வரும் புதன்கிழமை கேப்டவுன் நகரில் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x