Published : 26 Feb 2018 07:49 AM
Last Updated : 26 Feb 2018 07:49 AM

குளிர்கால ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடம்

தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்தது.

தென் கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 11-ம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. இந்த நிலையில் நேற்று போட்டிகள் கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிறைவடைந்தன. பதக்கப் பட்டியலில் நார்வே அணி 14 தங்கங்களுடன் மொத்தம் 39 பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது. ஜெர்மனி 14 தங்கம் உள்பட 31 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கனடா 11 தங்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. போட்டியை நடத்திய தென் கொரியா 7-வது இடம் பெற்றது.

கடைசி நாள் நடந்த ஹாக்கிப் போட்டியில் ரஷியா 4-3 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி தங்கம் வென்றது. - ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x