Published : 02 Feb 2024 06:49 AM
Last Updated : 02 Feb 2024 06:49 AM

சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்: பிப்.4-ம் தேதி தொடக்கம்

கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் 100 ஆடவர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வரும் 4-ம் தேதிமுதல் 11-ம் தேதி வரை சென்னைநுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவது இது 6-வது முறையாகும்.

இந்த தொடரில் 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கிறார்கள். 117- வது இடத்தில் உள்ள இத்தாலி வீரர் லுகா நார்டி, 137-ம் நிலை வீரரான இந்தியாவின் சுமித் நாகல், 165-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் ஸ்வர்சினா டாலிபோர், 168-வது இடத்தில் உள்ள உக்ரைனின் விட்டலி சச்கோவ், 196-ம் நிலை வீரரான இத்தாலியின் ஸ்டெபானோ டிரவக்லியா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவின் நம்பர் 2 வீரரான ராம்குமார் ராமநாதன், செக் குடியரசின் நிகோலோஸ் பாஷில்லாஷ்விலி ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ வழங்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களான முகுந்த் சசிகுமார், சித்தார்த் விஸ்வகர்மா, மணீஷ் சுரேஷ்குமார் ஆகியோரும் களமிறங்குகின்றனர்.

4-ம் தேதி தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து 5-ம் தேதி பிரதான சுற்று தொடங்குகிறது. 10-ம்தேதி இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியும், 11-ம் தேதி ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியும் நடக்கிறது. இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.10 கோடி ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x