Published : 18 Jan 2024 06:47 PM
Last Updated : 18 Jan 2024 06:47 PM

One World vs One Family டி20 - பேட்டிங், பவுலிங்கில் அசத்திய சச்சின் டெண்டுல்கர்!

கோப்புப்படம்

முத்தனஹள்ளி: One World மற்றும் One Family அணிகளுக்கு இடையிலான காட்சி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது அசத்தல் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். அதன் மூலம் அவரது கிரிக்கெட் ரசிகர்களை மீண்டும் ஒருமுறை ஈர்த்துள்ளார்.

50 வயதான சச்சின், கடந்த 1989 முதல் 2013 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி உள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் விளையாடி உள்ளார். அதன் மூலம் 34,357 ரன்கள் மற்றும் 201 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இதில் 100 சதங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என மொத்தம் 24 பேர் இந்த போட்டியில் பங்கேற்றனர். இதில் One World அணியை சச்சின் வழிநடத்தினார். One Family அணியை யுவராஜ் சிங் வழிநடத்தினார். இந்தப் போட்டி கர்நாடக மாநிலம் முத்தனஹள்ளியில் உள்ள சாய் கிருஷ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சச்சினின் அணி முதலில் பந்து வீசியது. யுவராஜ் சிங் வழிநடத்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் சச்சின் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஒன் வேர்ல்ட் விரட்டியது. நமன் ஓஜா மற்றும் சச்சின் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சச்சின் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் இதில் அடங்கும். முத்தையா முரளிதரன் வீசிய முதல் பந்தில் சச்சின் ஆட்டமிழந்தார். 19.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஒன் வேர்ல்ட் அணி. தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை ரசிகர்களை ஈரத்திருந்தார் சச்சின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x