Published : 24 Dec 2023 05:50 AM
Last Updated : 24 Dec 2023 05:50 AM

100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளும் ஜேஎஸ்கே டி20 கிரிக்கெட் தொடர் 26-ம் தேதி தொடக்கம்

ஜேஎஸ்கே டி 20 கிரிக்கெட் தொடருக்கான சீருடை அறிமுக விழா சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நேற்று நடைபெற்றது.

சென்னை: பள்ளிகள் இடையிலான ஜேஎஸ்கே (ஜூனியர் சூப்பர் கிங்ஸ்) டி 20 கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் போட்டி வரும் 26 முதல் ஜனவரி 26 வரை நடைபெறுகிறது. இந்த தொடர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இந்த தொடரின்தலைமை ஸ்பான்சராக உள்ளது.

இம்முறை தமிழகத்தை சேர்ந்த 18மாவட்டங்களில் இருந்து 101 அணிகளுடன் பெங்களூரு, ஆந்திரா மற்றும் கோவாவில் இருந்தும் அணிகள் கலந்து கொள்கின்றன. தமிழகத்தில் இருந்து சென்னை, திருச்சி, விழுப்புரம், கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த சீசனில் 32 அணிகள் கலந்துகொண்ட நிலையில் தற்போது 100-க்கும் மேற்பட்ட அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. ஜேஎஸ்கே டி 20 தொடர் இரு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் கட்டம் டிசம்பர் 26 முதல் ஜனவரி 7 வரை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் நாக் அவுட் முறையில் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் போட்டியில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளும், பிற மாவட்டங்களில் இருந்து வெற்றி பெறும் 6 அணிகளும்ஜனவரி 22 முதல் 26-ம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெறும் 2-வது கட்ட தொடரிலும் விளையாடும். இது லீக் வடிவில் நடத்தப்படுகிறது. இறுதிப் போட்டி மின்னொளியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டி தொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை துரைப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹேமங் பதானி கலந்து கொண்டு போட்டிக்கான சீருடைமற்றும் டிராபியை அறிமுகம் செய்தார்.நிகழ்ச்சியில் சிஎஸ்கே கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகாசி விஸ்வநாதன், இக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் வணிக பிரிவு சீனியர் துணைத் தலைவர் விக்னேஷ் முரளி, ஃப்ரீயர் இன்டர்நேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.ஜே.  நிவாஸராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x