Published : 16 Jul 2014 03:37 PM
Last Updated : 16 Jul 2014 03:37 PM

இயன் போத்தம் சாதனையை முறியடிப்பாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?

லார்ட்ஸ் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இயன் போத்தம் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயன் போத்தம் லார்ட்ஸ் மைதானத்தில் 68 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளுக்கான சாதனை இதுவே.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை லார்ட்ஸ் போட்டியில் 67 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக நாளை லார்ட்ஸில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன், போத்தம் சாதனையை முறியடிப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

போத்தம் லார்ட்ஸ் மைதானத்தில் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு இன்னிங்ஸில் 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் போத்தம் ஏற்படுத்திய லார்ட்ஸ் சாதனைகள் ஆகும்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் மாறாக 4 முறையே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அன்று சாதனை புரிந்ததோடு, கடைசி விக்கெட்டுக்காக ஜோ ரூட்டும் இவரும் உலக சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜடேஜாவைப் பிடித்துத் தள்ளியதாக ஆண்டர்சன் மீதான விசாரணை முடிய இன்னும் 14 நாட்கள் ஆகும் என்பதால் நாளை ஆண்டர்சன் களமிறங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x