Published : 15 Dec 2017 02:51 PM
Last Updated : 15 Dec 2017 02:51 PM

அஃப்ரீடி ஹாட்ரிக்கில் சிக்கிய சேவாக்: டி10 கிரிக்கெட்டில் சேவாக் அணி தோல்வி

ஷார்ஜாவில் கோலாகலமாகத் தொடங்கிய டி10 (10 ஓவர்) கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சேவாக் தலைமை மராத்தா அராபியன்ஸ் அணி ஷாகித் அப்ரீடி தலைமை பாக்டூன்ஸ் அணியிடம் தோல்வி தழுவியது.

இதில் ஷாகித் அப்ரீடி தன் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் சாதனை புரிந்தார், ஆட்டத்தின் 5-வது ஓவரில் ஷாகித் அப்ரீடி முதலில் ரைலி ரூசோவை வீழ்த்தினார், இவர் 5 ரன்களில் லாங் ஆனில் நஜிபுல்லா ஸத்ரானின் அருமையான டைவ் கேட்சுக்கு வெளியேறினார். அடுத்த பந்தில் டிவைன் பிராவோ நேராக கால்காப்பில் வாங்கினார், கேப்டன் சேவாகும் அடுத்த பந்தே பிராவோ போலவே வாங்கி எல்.பி.ஆனார். அப்ரீடி ஹாட்ரிக் மராத்தா அணி 46/5 என்று சரிந்தது.

அதன் பிறகு அலெக்ஸ் ஹேல்ஸ் காட்டடி தர்பார் மேற்கொண்டார், இவர் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசினாலும் அப்ரீடி அணியின் 122 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 10 ஓவர்களில் 96/7 என்று தோல்வி தழுவியது.

முன்னதாக பாக்டூன்ஸ் அணி 10 ஒவர்களில் 121/4 என்று விளாசியது.

பகர் ஜமான் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 45 ரன்களையும் டாஸன் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 44 ரன்களையும் எடுத்தனர். அப்ரீடி 1 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x