Published : 03 Sep 2023 07:12 AM
Last Updated : 03 Sep 2023 07:12 AM

ஆடவருக்கான ஐவர் ஹாக்கி - உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தகுதி

சலாலா: ஆடவருக்கான ஐவர் ஹாக்கியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10-4 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஹாக்கி 5 உலகக் கோப்பை தொடர் 2024ம் ஆண்டு ஜனவரில் ஓமனில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது ஓமனில் உள்ள சலாலாவில் நடை பெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா -மலேசியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 10-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் மொகமது ரஹீல் 4 கோல்களும் (9, 16, 24 மற்றும்24-வது நிமிடங்கள்), மனீந்தர் சிங் (2-வது நிமிடம்), பவன் ராஜ்பர் (13-வதுநிமிடம்), சுக்வீந்தர் சிங் (21-வது நிமிடம்), திப்சன் திர்கே (22-வது நிமிடம்), ஜுக்ராஜ் சிங் (23-வது நிமிடம்), குர்ஜோத் சிங் (29-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 7-3 என்ற கோல் கணக்கில் ஓமனை தோற்கடித்தது. இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு போட்டிக்கு முன்னேறியதன் மூலம் ஹாக்கி 5 உலகக் கோப்பை தொடருக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x