Published : 18 Aug 2023 07:12 AM
Last Updated : 18 Aug 2023 07:12 AM

10 வருடங்களுக்குப் பிறகு வங்கதேசம் செல்கிறது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி

கோப்புப்படம்

வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வரும் செப்டம்பர் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் செப்டம்பர் 21, 23 மற்றும் 26-ம் தேதிகளில் டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று உறுதி செய்துள்ளது.

அக்டோபர் மாதம் 5-ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்த தொடர் அமையும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் மீண்டும் வங்கதேசம் பயணிக்கும் நியூஸிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டெஸ்ட் நவம்பர் 28-ம் தேதியும் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் டிசம்பர் 6-ம் தேதியும் தொடங்குகிறது.

நியூஸிலாந்து அணி கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருந்தது. தற்போது 10 வருடங்களுக்குப் பின்னர் அங்கு சென்று விளையாட உள்ளது. 2010-ம் ஆண்டு சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 4-0 எனவும், 2013-ல் நடைபெற்ற தொடரை 3-0 எனவும் கைப்பற்றி இருந்தது வங்கதேச அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x