Published : 24 Nov 2017 08:51 PM
Last Updated : 24 Nov 2017 08:51 PM

கிளென் மேக்ஸ்வெல் இரட்டைச் சதம்: ஆஷஸ் தேர்வை வலியுறுத்தும் அதிரடி

நார்த் சிட்னி ஓவலில் நடைபெற்ற விக்டோரியா, நியூசவுத்வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் அதிரடி இரட்டைச் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணித் தேர்வாளர்களுக்கு செய்தி அறிவித்துள்ளார்.

விக்டோரியா அணியைச் சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல், நியூசவுத்வேல்ஸ் அணியின் சிறந்த வீச்சாளர்களான டக்கி போலிஞ்சர், டிரெண்ட் கோப்லேண்ட், ஸ்டீவ் ஓகீஃப், ஷான் அபாட், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோரை நார்த் சிட்னி மைதானம் நெடுக சிதற அடித்தார் கிளென் மேக்ஸ்வெல்.

விக்டோரியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 365 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது, கிளென் மேக்ஸ்வெல் 213 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக உள்ளார்.

இரட்டைச் சதத்தை 226 பந்துகளில் 26 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் விளாசியுள்ளார் கிளென் மேக்ஸ்வெல். இது மேக்ஸ்வெலின் முதல்தர கிரிக்க்கெட் அதிகபட்ச ஸ்கோராகும், முந்தைய அதிகபட்ச ஸ்கோர் 155 என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான புல்ஷாட் மூலம் தனது 7-வது முதல்தர சதத்தை எட்டினார்.

நடப்பு ஆஷஸ் தொடரில் இவருக்குப் பதிலாக ஷான் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவை நீக்கலாம் என்ற முடிவுகு ஆஸி. வந்தால் ஒருவேளை கிளென் மேக்ஸ்வெல் அடுத்த ஆஷஸ் டெஸ்டில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உணவு இடைவேளை முடிந்து போலிஞ்சரை ஒரே ஓவரில் 15 ரன்கள் விளாசிய கிளென் மேக்ஸ்வெல், பிறகு ஷான் அபாட்டைத் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகள் விளாசினார். வாய்ப்புகளே வழங்காத ஒரு இன்னிங்சாக அமைந்தது இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x