Published : 07 Jul 2014 08:58 PM
Last Updated : 07 Jul 2014 08:58 PM

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகானுக்கு திடீர் மாரடைப்பு: உயிருக்குப் போராட்டம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராஜேஷ் சவுகானுக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்குப் போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

48 வயதாகும் ராஜேஷ் சவுகான் பிலாயில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பிலாய் ஸ்டீல் பிளாண்டில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த 2 நாட்கள் மிகவும் முக்கியமானது என்றும் அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர் ஏ.பி.சாவந்த் தெரிவித்துள்ளார்.

1990ஆம் ஆண்டுகளில் இந்திய ஸ்பின் பவுலர்கள் வரிசையில் அனில் கும்பிளே, வெங்கடபதி ராஜு ஆகியோருடன் ஆஃப் ஸ்பின் வீசியவர் ராஜேஷ் சவுகான். இவர் 21 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இவர் ஆக்ரோஷமான கிரிக்கெட்டிற்குப் பெயர் பெற்றவர். இவர் பந்து வீச்சை ஒரு தொடரில் சரியாக ஆட முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய வீரர்கள் இவர் 'த்ரோ’ செய்ததாகப் புகார் எழுப்பியதும் உண்டு.

ஆனால் ராஜேஷ் சவுகான் என்றால், 1997ஆம் ஆண்டு கராச்சியில பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி ஒன்றில் சக்லைன் முஷ்டாக் வீசிய கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றது நினைவுக்கு வரும்.

கடைசி தகவல்: நலமுடன் உள்ளார்:

உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சவுகான் ஆஞ்ஜியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சைகுப் பிறகு நலமாக உள்ளதாக மருத்துவர்கள் சற்று முன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x