Published : 17 Oct 2017 10:35 AM
Last Updated : 17 Oct 2017 10:35 AM

எகிப்து டேபிள் டென்னிஸ் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்றார் சென்னை வீராங்கனை

எகிப்து நாட்டில் நடைபெற்று வரும் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனையான செலினா செல்வகுமார் 3 தங்கப் பதக்கங்கள் வென்றார்.

எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 17 வயதான சென்னையைச் சேர்ந்த வீராங்கனையான செலினா செல்வகுமார் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான எகிப்தின் மரியம் அலோட்பையை எதிர்த்து விளையாடினார். இதில் செலினா 11-5, 12-10, 8-11, 6-11, 11-3, 6-11, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இரட்டையர் பிரிவில் நைஜீரியாவின் ஒரிபமைஸூடன் இணைந்து விளையாடிய செலினா இறுதிப் போட்டியில் 11-8, 12-10, 9-11, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் எகிப்தின் பரிதா பதாவி, கீரிஸ் நாட்டின் மலமாத்தேனியா ஜோடியை வென்றார். கலப்பு அணிகள் பிரிவிலும் செலினா ஏற்கெனவே தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x