வடபழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

படங்கள்: ம.பிரபு

படங்கள்: ம.பிரபு

Updated on
2 min read

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவையொட்டி கோலாகலமாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை வடபழனி முருகன் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பிரம்மோற்சவத் திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட் கள் நடைபெற்ற விழாவில் நாள்தோறும் வடபழனி ஆண்டவருக்கு பல வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் வாகன புறப்பாடும் விமரிசையாக நடைபெற்றன.

முக்கிய நிகழ்வான தேரோட்டம், கடந்த 27ம் தேதி நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான (வைகாசி விசாகம்) நேற்று அதிகாலை 4 மணிக்கே கோயில் நடைதிறக்கப்பட்டு, பள்ளியறை பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தன. காலை 8 மணி அளவில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் வீதி உலா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தீர்த்த வாரி உற்சவம் நடந்தது. பின் யாக சாலை பூஜைகள் தொடங்கி, மகாபூர்ணஹுதி, கடப்புறப்பாடு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இரவு 7 மணி அளவில் விழாவின் முக்கிய அம்சமான திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதில் சீர்வரிசை தட்டு வைத்து, எஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. பின், கலச பூஜை நடத்தப்பட்டு சுவாமிக்கு பூணூல் மாற்றி காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக யாக சாலை வளர்த்து ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து மாலை மாற்றுதல், பாலும் பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது.

<div class="paragraphs"><p><em>படங்கள்: ம.பிரபு</em></p></div>

படங்கள்: ம.பிரபு

பின்னர் திருமாங்கல்ய பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 'முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமாங்கல்ய தாரணம், பொரியிடுதல் நிகழ்வு தீபாராதனை நடந்தது. திருக்கல் மொய் எழுத பக்தர்கள் அழைக் யாண வைபவம் முடிந்ததும் கப்பட்டனர். பக்தர்கள் மொய் எழுதியதும் அதற்கான ரசீது மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு வடபழனி ஆண்டவர் கோயில் அன்னதானக் கூடத்தில் பக்தர்களுக்கு வடை, பாயாசத் துடன் கல்யாண விருந்து வழங் கப்பட்டது. இதைத் தொடர்ந்து மயில்வாகனத்தில் புறப்பாடு நடந்தது. பின்னர் இரவு 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

<div class="paragraphs"><p><em>படங்கள்: ம.பிரபு</em></p></div>
‘ரீல்ஸ்’ வெளியிடும் தவெக எம்எல்ஏக்கள் - ஆய்வுக்கு செல்ல தயங்கும் அதிகாரிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in