திருப்பதி ஏழு​மலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்​கம்

திருப்பதி ஏழு​மலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்​கம்
Updated on: 
1 min read

திருப்​பதி: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் நவராத்​திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்​கி, வரும் 20-ம் தேதி சக்கர ஸ்நானம் வரை கோலாகல​மாக நடை​பெற உள்​ளது. திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் நவராத்​திரி பிரம்​மோற்சவ விழா இன்று (திங்கள்​கிழமை) தொடங்​கு​கிறது. இதையொட்டி நேற்று அங்​கு​ரார்பண நிகழ்ச்​சிகள் ஆகம விதி​களின்​படி நடை​பெற்​றது. நேற்றிரவு விஸ்​வக்​சேனரின் மாட வீதி உலா நடை​பெற்​றது.

அதனை தொடர்ந்து பிரம்​மோற்சவ விழா​வின் முதல் நாளான இன்​றிரவு பெரிய சேஷ வாக​னத்​தில் ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாக மலை​யப்​பர் பவனி வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலிப்​பார். 2-ம் நாள் காலை சின்ன சேஷ வாக​னம், இரவு அன்ன வாகன சேவை; 3-ம் நாள் காலை சிம்ம வாக​னம், இரவு முத்து பல்​லக்கு வாக​னம்; 4-ம் நாள் காலை கற்பக விருட்ச வாக​னம், இரவு சர்வ பூபால வாக​னம், 5-ம் நாள் காலை மோகினி அலங்​காரம், இரவு கருட வாகன சேவை நடை​பெறும்.

அதைத் தொடர்ந்​து, 6-ம் நாள் காலை அனு​மன் வாக​னம், மாலை புஷ்பக விமான ஊர்​வலம், இரவு கஜ வாகன சேவை; 7-ம் நாள் காலை சூரிய பிரபை, இரவு சந்​திர பிரபை; 8-ம் நாள் காலை தங்க தேரோட்​டம், இரவு குதிரை வாகன சேவை நடை​பெறும். இறுதியாக 9-ம் நாள் காலை 6 மணி முதல் 9 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்​சியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

திருப்பதி ஏழு​மலையான் கோயில் பிரம்மோற்சவம் இன்று தொடக்​கம்
உச்ச நீதிமன்றம் நோக்கி இண்டியா கூட்டணி இன்று பேரணி: அனைவரும் பங்கேற்க ராகுல் காந்தி அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in